உலகம் முழுவதும் பயங்காட்டி வரும் கொ ரோ வைரஸிற்கு மருந்துகள் கண்டுபிடிக்காமல் பத்ரிவரும் நிலையில், பலர் தங்களது மருந்துகள் கொரோனாவைக் குணப்படுத்தும் என்று கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை தொட்டிபாளையம் பகுதியில் இயங்கி வரும் நெல்லை லாலா ஸ்வீட் கடை, 19 மூலிகைகள் வைத்து சித்த மருத்துவ முறையில் தயாரிக்கப்பட்ட மூலிகை மைசூர்பாகு கொ ரோனா வை ஒரே நாளில் சரிசெய்யும் என நோட்டீஸ் அடித்து விநியோகம் செய்யப்பட்டுவருகிறது.
கோவை சின்னியம்பாளையம், ஆர்.ஜி.புதூர், வெள்ளலூர் ஆகிய இடங்களில் கொ ரோ னா அறிகுறி இருந்தவர்கள் இந்த மூலிகை மைசூர்பா சாப்பிட்டு அதன் மூலம் ஓரிரு நாட்களில் அவர்கள் உடல் சரியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தன்னுடைய தாத்தா சித்த மருத்துவத்தில் கற்றுக் கொடுத்த சில வழிமுறைகளை பின்பற்றி இந்த மூலிகை மைசூர்பாவை தயாரித்ததாகவும், 19 வகையான மூலிகை பொருட்களை கொண்டு இந்த மைசூர்பா தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அக்கடையின் உரிமையாளர் ஸ்ரீ ராம் கூறியுள்ளார்.
ஒரு நாளைக்கு நான்கு துண்டுகள் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து விரைவில் கொ ரோனா தொற்றில் இருந்து விலகலாம் எனவும், பக்க வி ளைவுகள் எதுவும் இல்லை எனவும் தெரிவித்துள்ள அவர், கொரோனா பாதிக்கப்பட்ட அல்லது அறிகுறிகள் இருப்பவர்கள் எங்களுக்கு தெரியப்படுத்தினால் வீடு வீடாக சென்று இலவசமாக மைசூர்பாவை விநியோகம் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு விரும்பினால் பிரதமர் நரேந்திர மோடியிடம் இதற்கான முறையை இலவசமாக தர தயாராக இருப்பதாகவும், மத்திய அரசு மூலம் வெளிநாடுகளுக்கு விலைக்கு விற்று, 2020ம் ஆண்டில் இந்தியா வல்லரசாகும் என்ற அப்துல் கலாமின் கனவு நிறைவேற துணை நிற்போன் எனவும் அந்த நோட்டீஸில் சொல்லப்பட்டுள்ளது.