கோழித்தீவனம் மக்காச்சோளத்திற்கு இறக்குமதி வரியை நீக்குங்க.. பிரதமருக்கு முதல்வர் பழனிச்சாமி கடிதம்

கோழித்தீவனம் மக்காச்சோளத்திற்கு இறக்குமதி வரியை நீக்குங்க.. பிரதமருக்கு முதல்வர் பழனிச்சாமி கடிதம்

கோழித்தீவனம் மக்காச்சோளத்திற்கு இறக்குமதி வரியை நீக்குங்க.. பிரதமருக்கு முதல்வர் பழனிச்சாமி கடிதம்

சென்னை: முக்கிய கோழித் தீவனமாக மக்காச்சோளத்திற்கு கடும் பற்றாக்குறை நிலவுவதால் வெளிநாடுகளில் இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்கான இறக்குமதி வரியை நீக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார். கோழித் தீவனத்தில் முக்கியப் பங்கு வகிப்பது மக்காச் சோளம். இந்தியாவில் நிகழாண்டில் 80 லட்சம் டன் அளவுக்கு உற்பத்தி சரிந்ததால், கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கோழிப் பண்ணைகளுக்குத் தேவையான மக்காச்சோளம், உக்ரைன் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து, சுமார் 4 லட்சம் டன் அளவில் இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த தகவலை தமிழ்நாடு கோழிப்பண்ணை சங்க தலைவரும் நாமக்கல் எம்பியுமான சின்ராஜ் அண்மையில் தெரிவித்து இருந்தார்.

Related image

 

கோழித்தீவனம்

இந்நிலையில் கோழிப் பண்ணையாளர்கள் மக்காசோளத்தை இறக்குமதி செய்ய இறக்குமதி வரி விதிக்கப்படுவதால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நலனை கருத்தில் கொண்டு மக்காச் சோளத்தின் இறக்குமதி வரியை நீக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்..

கோழி இறைச்சி

கோழி இறைச்சி

அந்த கடிதத்தில், நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்டட மாவட்டங்களில் கோழி வளர்ப்பு வணிகம் நடந்து வருவதாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார். ந 3.5 முதல் 4 கோடி வரை அடுக்கு பறவைகள் கொண்ட பல்வேறு திறன்களில் சுமார் 1,000 முதல் 1,300 அடுக்கு பண்ணைகள் உள்ளது என்றும்.. 2013-14 முதல் 2017-18 வரையிலான காலகட்டத்தில் முட்டை உற்பத்தியில் 23.5% மற்றும் கோழி இறைச்சியில் 30.53% என தமிழகம் வளர்ச்சி கண்டுள்ளது என்றும் தமிழக முதல்வர் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதையும் பாருங்க:  இந்திய பெண்களின் அசரவைக்கும் நடனம்

தமிழக அரசு ஊக்குவிப்பு

 

தமிழக அரசு ஊக்குவிப்பு

கோழி வளர்ப்பை தமிழக அரசு பெரிதும் ஊக்குவித்து வருகிறதாக கூறிய முதல்வர், கோழி இறைச்சியில் நான்காவது இடத்திலும் முட்டை உற்பத்தியில் இரண்டாவது இடத்திலும் தமிழகம் உள்ளதாக தெரிவித்தார்.