கோழி கருப்பு முட்டையிடும் அரிய வீடியோ

கோழி கருப்பு முட்டையிடும் அரிய வீடியோ

கோழி கருப்பு முட்டையிடும் அரிய வீடியோ காட்சி ஓன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையவாசிகள் கவனத்தை ஈர்த்து இணையத்தை ஆக்கிரமித்து வைரலாகி வருகிறது.

கருங்கோழி அல்லது நாட்டுக்கருப்புக் கோழி, கருங்கால் கோழி, கடக்நாத் கோழி ( Kadaknath ) போன்ற பெயர்களால் அழைக்கப்படுவது இந்தியாவில் காணப்படும் கோழியாகும். இது இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தது. இது “‘காலாமசி”‘ எனவும் அழைக்கப்படுகிறது (கருஞ்சதைக் கோழி).இந்த கோழி இனம் கருப்புநிற இறைச்சிக்கும், நல்ல சுவைக்கும் புகழ்பெற்றது. இதன் இறைச்சி உண்பதால் நல்ல வீரியம் உண்டாவதாக நம்பப்படுகிறது. இதன் உடலில் மெலனின் நிறமி மிகுந்து காணப்படுவதால் இவ்வாறு காணப்படுகிறது. இப்பறவை முற்றிலும் கருப்பு நிறத்தில் உள்ளது.

கருப்பு தோகையில் பச்சை நிறம் கலந்து வானவில்லில் உள்ளது போன்ற வண்ணங்கள் கொண்டதாகவும், இதன் இறைச்சி, எலும்புகள் போன்ற அனைத்து பாகங்களும் கருப்பு நிறத்தில் இருக்கும். இந்தக் கோழியின் தோல், அலகு, கால் விரல்கள், பாதம் போன்றவை சாம்பல் நிறத்தில் இருக்கும். கொண்டை, நாக்கு போன்றவை இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.இதன் இறைச்சியில் உள்ளதாகக் கூறப்படும் மருத்துவ குணங்களால் இதன் இறைச்சிக்கு அதிக தேவை உள்ளது. இதனால் இந்தக் கோழிகளை அழிவில் இருந்து காக்க, மாநில அரசு வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் 500 குடும்பங்களுக்கு இந்த கோழியை வளர்க்க நிதி ஆதரவு மற்றும் உதவி பெறும் திட்டத்தை துவங்கியுள்ளது. இக்கோழி இனம் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் பண்ணை முறையிலும் மேச்சல் முறையிலும் வளர்க்கப்படுகிறது.

இதையும் பாருங்க:  பிறந்த உடனே ' நான் வந்துட்டேன்' என்று பேசிய குழந்தை...மிரண்டு போன டாக்டர்..அதிசய நிகழ்வு..

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...




‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்