சகோதரியுடன் நடிகை வரலட்சுமி சரத்துக்குமார்
சகோதரியுடன் நடிகை வரலட்சுமி சரத்துக்குமார் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இணைவாசிகளை கவர்ந்து தற்போது செம் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை வரலட்சுமி.கதாநாயகி,வில்லி ,துணை கதாபாத்திரம் என எதை கொடுத்தாலும் பட்டையை கிளப்புபவர்.இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகிய போடா போடி படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்குள் நுழைந்தவர் வரலக்ஷ்மி சரத்குமார்.

இவர் தமிழ் படங்களில் மட்டுமில்லாமல் கன்னடம்,மலையாளம் தெலுங்கு போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.தனது நடிப்பு திறமையை வெளி காண்பித்து பலரசிகர்களை தனது வசம் இழுத்தவர்.

இவர் நடித்த தாரை தப்பட்டை படம் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க செய்தார்.அன்று முதல் இன்று வரை நடிப்பில் அதிக ஈடுபாடுடன் நடித்து ரசிகர்களை மகிழ்விக்கிறார்.

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக மட்டுமில்லாமல் வில்லியாகவும் நடித்து அசத்தி வருகிறார்.சர்கார் மற்றும் சண்டைக்கோழி 2 படங்களில் வில்லியாக நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.

இந்த வருடம் மட்டும் படங்களை கையில் வைத்துள்ளார் வரலக்ஷ்மி.நிச்சயம் இவருக்கு இந்த 8 படமும் நல்ல வரவேற்பினை பெற்றுத்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இவர் நடித்த தெலுங்கு மற்றும் கன்னட படங்களும் விரைவில் வெளியாக இருக்கிறது.மேலும் பல படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்து வருகிறார்.

இவர் இன்று தங்கை பூஜா சரத்குமார் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் ,தங்கையுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.