சமையலுக்கு காய்க்கறிகளை சமத்தாக கழுவி கொடுக்கும் குரங்கு

சமையலுக்கு காய்க்கறிகளை சமத்தாக கழுவி கொடுக்கும் குரங்கு

சமையலுக்கு காய்க்கறிகளை சமத்தாக கழுவி கொடுக்கும் குரங்கு ஒன்றின் வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் ஆதரவை பெற்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

பொதுவாகவே குரங்கு எந்த வேலை செய்தாலும் அதை சின்னா பின்னமாக்கிவிடும். அதனால் தான் குரங்கு கையில் பூமாலை கிடைத்தது போல் என சொல்வார்கள். ஆனால் அந்த பழமொழியை எல்லாம் மாற்றியமைத்து குரங்கு ஒன்று அசத்தியுள்ளது. குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் எனச் சொல்வார்கள். அதை மெய்பிக்கும் வகையில் குரங்குகளும் மனிதர்களைப் போலவே சில சேட்டைகள் செய்வதைப் பார்த்திருப்போம். கையால் பழங்கள் உள்ளிட்டவற்றை சாப்பிடும்போதும் அதில் அப்படியே மனிதர்களின் சாயல் இருக்கும்.

அதேநேரத்தில் குழந்தைகள் சேட்டை செய்யும் போது உனக்கு இன்னும் வால் மட்டும் தான் முளைக்கல எனவும் சொல்வதைக் கேட்டிருப்போம். அந்த அளவுக்கு மனிதன், குரங்கு இருவரும் ஒத்த தன்மையைக் கொண்டவர்கள் தான். மனிதனுக்கு ஆறு அறிவு. குரங்குக்கு ஐந்தறிவு என்பதைத் தாண்டி பெரும்பாலான விசயங்கள் ஒத்துப்போகும் தன்மை கொண்டவையே.

ஆனால் இப்போதுகுரங்குக்கும் ஆறு அறிவு இருக்குமோ என சந்தேகப்படும் அளவுக்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது. அப்படி என்ன நடந்தது எனக் கேட்கிறீர்களா? இளம் பெண் ஒருவர் தன் வீட்டுக்கு சமையல் செய்ய ஆயுத்தமாகிறார். அப்போது அவருக்கு எதிரே குரங்கு ஒன்று வந்து அமர்கிறது. அந்தக் குரங்கு, அந்த பெண் ஒரு பாத்திரத்தில் போடும் காய்கறிகளை நேக்காக இருதுண்டுகளாக கட் செய்கிறது.

நன்கு பயிற்சி எடுத்துக்கொண்டது போல் செம ஸ்பீடாக குரங்கு அந்த சமையலுக்கு உதவுகிறது. அந்த பெண் காய்கறியை எடுத்துப்போட, போட குரங்கு கட் செய்துகொண்டே இருக்கிறது. இந்த வீடீயோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே அந்த காட்சியைப் பாருங்களேன்.

உங்கள் கருதுங்களை இங்கே சொல்லுங்கள்

கருத்தை சொல்லுங்கள் ...

‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்