சாத்தான்குளம் சம்பவத்தில் அளிக்கபப்ட்ட காட்சிகள் கிடடைந்துள்ளன : சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர்

சாத்தான்குளம் சம்பவத்தில் அளிக்கபப்ட்ட காட்சிகள் கிடடைந்துள்ளன : சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர்

சாத்தான்குளம் சம்பவத்தில் அளிக்கபப்ட்ட காட்சிகள் கிடடைந்துள்ளன என்று  சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர் தெரிவித்துள்ளார்

சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர், சாத்தான் குளத்தில் இன்று செய்தியாளர் களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, தலைறைவாக உள்ள காவலர் முத்துராஜ் இன்னும் 2 நாள்களில் கைது செய்து விடுவோம். சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில், அழிக்கப்பட்ட சில சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளன. வழக்கு தொடர்பாக ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸை விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது. வழக்கில் தொடர்புடைய சிசிசிடிவி காட்சிகள் சில கிடைத்துள்ளன என்று தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் அரசியல் தலையீடு ஏதும் இருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, வழக்கில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை என்று பதில் அளித்தார்.

இதற்கிடையே, சாத்தான்குளம் தந்தை – மகன் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதால், சாத்தான்குளம் காவல்நிலையத்தை காவல்துறை வசம் ஒப்படைக்க வருவாய்த் துறையினருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

 

Related articles

error: Content is protected !!