‘சின்ன மச்சான்’ பாடலுக்கு மாப்பிள்ளை பொண்ணு போட்ட செம டான்ஸ்

‘சின்ன மச்சான்’ பாடலுக்கு மாப்பிள்ளை பொண்ணு போட்ட செம டான்ஸ்

திருமணத்தில் ‘சின்ன மச்சான்’ பாடலுக்கு மாப்பிள்ளை பொண்ணு போட்ட செம டான்ஸ் வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் ஆதரவை பெற்று தற்போது அதிகப்பேரால் பார்க்கப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருமணங்களும்,திருவிழாக்களுக்கு நிகராக உறவினர்களால் கொண்டாடப்படுகிறது. திருவிழா ஊரார் ஓன்று சேர்ந்து நிகழ்த்துவார்கள். திருமணம் சம்மந்தப்பட்ட குடும்ப உறவினர்களால் திருவிழா போன்று ஊரார் முன்னிலையில் கொண்டாடுவர். ஒரு காலத்தில் திருமணம் நடைபெறும் போது குனிந்த தலை நிமிர்ந்து பார்க்கக்கூட தைரியம் இன்றி இருந்த பெண்கள் தற்போது தங்கள் திருமணங்களில் தாங்களே ஹீரோயின் போன்றும் மணமகன் ஹீரோ போன்றும் தங்களுக்கு விருப்பமான பாடல்களை தேர்ந்தெடுத்து நடனம் ஆடுகின்றனர்.

தங்கள் திருமண நாளில் ஊரார், உறவினர்கள் முன்னிலையில் நடன குழுவினருடன் சேர்ந்து மேடையில் மணமகன் மற்றும் மணமகள் ஆடும் நடனங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. “Z” தலைமுறை என்று அழைக்கப்படும் தலைமுறையினர் தற்காலத்தில் நிறைய மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர்.

அதில் ஓன்று தான் திருமண விழாவில் நடனம் ஆடும் வழக்கம். பெரியவர்களும் தங்கள் குழந்தைகள் ஆடும் காட்சியைக் கண்டு ரசித்து அவர்களை ஊக்கப்படுத்தியது நன்றாக உள்ளது. இந்த காட்சியில் திருமண ஜோடி ஆடுவதற்கு சுற்றி இருந்த உறவினர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தியது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி உள்ளது.

இதையும் பாருங்க:  இரு கைகளிலும் கம்பு எடுத்து சிலம்பம் சுற்றி அசத்திய தமிழச்சி! மிஸ் பண்ணாம பாருங்க!