சிறுவயதில் சிவங்கியோட திறமைய பாருங்க

சிறுவயதில் சிவங்கியோட திறமைய பாருங்க

விஜய் தொலைக்காட்சியின் மிக பிரபலமான தொடர்களுள் ஒன்று குக்கு வித் கோமாளி. சிறியவர் முதல் பெரியவர் வரை இந்த தொடர்யை ரசிக்காத ஆட்களே கிடையாது. இன்றைய இளைஞர்கள் ஸ்ட்ரெஸ் பஸ்ட்டர் என கூறும் அளவிற்கு இந்த தொடர் பட்டிதொட்டி எங்கும் பிரபலம். குக்கு வித் கோமாளி என்றாலே நம் நினைவில் முதலில் வருபவர்கள் புகழ் மற்றும் சிவாங்கி தான்.

அண்ணன் தங்கை என கூறி கொண்டு இவர்கள் இருவரும் செய்யும் அலப்பறைகள் அங்கிருக்கும் குக்குகளை தலையை பிச்சிக்க வைக்கும் என்றே கூறலாம். முக்கியமாக சிவாங்கியின் குறும்புத்தனத்தை பார்த்து ரசிகர்கள் அவரை கியூட்டி பை என்று தான் அழைகிறார்கள். சிவாங்கி முதலில் விஜய் தொலைக்காட்சியில் அறிமுகமானது சூப்பர் சிங்கர் மூலியமாக தான். ஆனால் சூப்பர் சிங்கரை விட அதிக ரசிகர்களை அவருக்கு பெற்று தந்த தொடர் குக்கு வித் கோமாளி தான்

சின்னத்திரையில் பிரபலமடைந்து தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் டான் படத்தில் நடித்து வருகிறார் சிவாங்கி. அதை தொடர்ந்து இன்னும் சில படங்களில் நடிக்கவுள்ளார் சிவாங்கி. இந்நிலையில் தற்போது சிவாங்கி தன்னுடைய குழந்தை பருவத்தில் பாட்டு பாடி அசத்திய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதையும் பாருங்க:  நடிகை ஸ்ரீ தேவி மகளா இது ? என்னாமா ஆடுறாங்க

கருத்தை சொல்லுங்கள் ...