சீனாவில் ‘டிக்டாக்’ செயலி சேவை நிறுத்தம்

சீனாவில் ‘டிக்டாக்’ செயலி சேவை  நிறுத்தம்

Follow us on Google News Click Here

‘டிக்டாக்’ செயலி சேவை ஹாங்காங்கில் நிறுத்தம்

பீஜிங்:

சீனாவின் ‘பைட் டான்ஸ்’ நிறுவனத்துக்கு சொந்தமான செயலி ‘டிக்-டாக்’ பொழுது போக்கு செயலியாக  இந்தியாவில் மிகவும் பிரபலமானதாக இருந்தது.

ஆனால் லடாக் எல்லையில் சீனா நடத்திய அத்து மீறிய தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், தேசத்தின் பாதுகாப்பு கருதியும் ‘டிக்-டாக்’ மட்டுமின்றி 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு சமிபத்தில் தடை விதித்தது.

இதனைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக் டாக் உள்ளிட்ட சீன செயலிகளை தடை செய்வது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்தார். இந்த நிலையில் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் செயல்பாட்டைப் நிறுத்துவதாக ‘டிக்-டாக்’ நிறுவனம் அறிவித்துள்ளது. ஹாங்காங்கின் தன்னாட்சி அதிகாரத்தை ஒழிக்கும் வகையில் சீனா கொண்டு வந்துள்ள புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை தொடர்ந்து ஹாங்காங்கில் ஏற்பட்ட சமீபத்திய நிகழ்வுகளின் விளைவாக அங்கிருந்து வெளியேற முடிவு செய்துள்ளதாக அந்த நிறுவனத்தின் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Follow us on Google News Click Here

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!