சூப்பர்ஸ்டார் படத்தை நிராகரித்த அரவிந்த்சாமி.. பிரபல நடிகருக்கு அதிஷ்டம்

சூப்பர்ஸ்டார் படத்தை நிராகரித்த  அரவிந்த்சாமி.. பிரபல நடிகருக்கு அதிஷ்டம்

Follow us on Google News Click Here

பிரித்வி-ராஜ் இயக்கத்தில் மோகன் லால் நடிப்பில் பிரமாண்ட வெற்றி பெற்ற படம் லூசிபர். இந்த படம் கிட்டத்தட்ட பாக்ஸ் ஆபிஸ் வசூலில் 175 கோடி சாதனை படைத்தது. முக்கியமான கதாபாத் திரத்தில் மோகன் லால்,விவேக் ஓபராய், மஞ்சுவாரியர், பிரித்திவி ராஜ் போன்ற பிரபலங்கள் நடித்து இருப்பார்கள்.

 

தெலுங்கில் இந்த படத்தை ரீமேக் செய்வ தற்கு போட்டி நிலவிய நிலையில் உரிமத்தை ராம்சரண் கைப்பற்றியுள்ளார். தந்தை சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவியை வைத்து தயாரிக்கவுள்ள நிலையில் சாஹோ படத்தை இயக்கிய சுஜித் தான் இந்த படத்தையும் இயக்க ஒப்பந்த மாகி உள்ளாராம்.

 

இந்த படத்தின் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த விவேக் ஓபராய்க்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஏற்கனவே நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பமில்லை என்று விவேக் ஓபராய் விலகி விட்டாராம்.

மஞ்சு வாரியாரின் கணவர் கதாபாத்திரத்தில் கெத்தான ஸ்டைலிஷான ஒரு நடிகரை தேர்வு செய்ய வேண்டும் என படக்குழுவினரின் இரண்டு நடிகர்களை தேர்வு செய்துள்ளனர்.

தனி ஒருவனில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த அரவிந்த் சாமியிடம் முதல் கட்டமாக பேசி உள்ளனர். ஆனால் கால்ஷீட் பிரச்சினையால் தற்போது வேண்டாமென்று ஒதுங்கிவிட்டார்.

 

இந்த வருடத்தில் மட்டும் கிட்டத்தட்ட 6 படங்களில் கமிட்டாகியுள்ளார் அரவிந்த்சாமி. பின்னர் ரகுமானிடம் பேசி கிட்டத்தட்ட உறுதி செய்து விட்டனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தெலுங்குக்கு ஏற்றபடி விறுவிறுப்பாக எடுக்கப் போவதாக படக்குழுவினர் முடிவெடுத்துள்ளனர்.

அப்போது முதல் இப்போது வரை தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷ் கதாபாத்திரமாக வலம் வருபவர் அரவிந்த்சாமி. மாப்பிள எப்படி வேணும்னு நம்ம தமிழ் பொண்ணுங்க கிட்ட கேட்டா, அரவிந்த்சாமி மாதிரி வேணும்னு இப்ப கூட சொல்லுவாங்க, அந்த அளவுக்கு ஸ்டைலிஷ் கிங்.

Follow us on Google News Click Here

கருத்தை சொல்லுங்கள் ...