சூப்பர் ஹீரோ ஆகிறார் நடிகர் விஜய்

சூப்பர் ஹீரோ ஆகிறார் நடிகர் விஜய்

தளபதி விஜயின் 65-வது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது இருந்தது. ஆனால் சம்பள தகராறில் அந்த படத்தில் இருந்து முருகதாஸ் விலகி விட்டார் என கூறப்படுகிறது . எனவே அவருக்கு பதிலாக விஜய் படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் பட இயக்குனர் நெல்சன் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய்யின் புதிய படத்தை இயக்குவதாக ஏற்கனவே பார்த்திபன், எஸ்.ஜே.சூர்யா, பாண்டிராஜ், அருண்ராஜா காமராஜ், அஜய் ஞானமுத்து ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன.

இந்நிலையில் அடுத்து தளபதி விஜய் சூப்பர் ஹீரோ கதையொன்றில் நடிக்க திட்டமிட்டு உள்ளதாகவும், அந்த படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை இயக்குனர் ரஞ்சித்தும் உறுதிப்படுத்தியுள்ளார்.

அவர் கூறும்போது, “காலா படத்தை முடித்ததுமே விஜய்யை நேரில் சந்தித்து கதை சொன்னேன். அது சூப்பர் ஹீரோ கதை. தளபதி விஜய்க்கும் அந்த கதை பிடித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார். எனவே 65-வது படத்தை முடித்து விட்டு ரஞ்சித்தின் சூப்பர் ஹீரோ கதையில் விஜய் நடிப்பாரா என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

ஹாலிவுட்டில் சூப்பர் ஹீரோ படங்கள் அதிகம் வருகின்றன. அவற்றுக்கு பெரிய ரசிகர்கள் வட்டாரமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க:  18 ஆண்டுகள் சினிமாவில் இருந்தாலும் பணம் இல்லாமல் அம்மா உணவகத்தில் சாப்பிடும் பிரபல நடிகர்..!! இவருக்கு இப்படி ஒரு க தி யா.? புகைப்படத்தை பார்த்து உறை ந்து போன ரசிகர்கள்..!!

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...
‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்