“செல்லம்மா செல்லம்மா” பாடலுக்கு காவலர்கள் போட்ட செம டான்ஸ்

“செல்லம்மா செல்லம்மா” பாடலுக்கு காவலர்கள் போட்ட செம டான்ஸ்

“செல்லம்மா செல்லம்மா” பாடலுக்கு காவலர்கள் போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையவாசிகளின் ஆதரவை பெற்று வைரலாகி வருகிறது.

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்போது தினந்தோறும் ஏதாவது ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகிறது அதுவும் காவலர்கள் சார்பாக எப்படியும் ஒரு வீடியோ உருவாக்கப்பட்டு அதனை இணையத்தில் வெளியிடுகின்றனர். அந்த வகையில்தான் காவலர்கள் சிவகார்த்தி நடிப்பில் வெளிவரவிருக்கும் டாக்டர் படத்தில் இடம் பெற்ற செல்லம்மா செல்லம்மா பாடலை ரீமேக் செய்து அதற்கு நடனமாடி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

அவர்களின் அந்த நடனம் தான் இன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது என்று சொல்லலாம். ஏனென்றால் பலரும் அந்த வீடியோவை பார்த்துவிட்டு தங்கள் பாராட்டுக்களையும் புகழையும் அந்த வீடியோவின் கீழ் கருத்துகளாக பகிர்ந்து வருகின்றனர் மேலும் அந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர். இதனால் அந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இதுபோன்று தினமும் பல விழிப்புணர்வு வீடியோக்களை காவல்துறையினர் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. காவல்துறையினரின் இந்த முயற்சி குறித்த உங்கள் பார்வை மற்றும் கருத்துக்களை எங்களுடன் இங்கே நீங்கள் பகிர்ந்து கொள்ளுங்கள். காவலர்களின் அந்த விழிப்புணர்வு வீடியோ உங்களுக்காக இங்கே

இதையும் பாருங்க:  திருமண வரவேற்பில் மணமக்கள் போட்ட டான்ஸ்