சைக்கிளில் சாகசம் செய்து அசத்திய தாத்தா

சைக்கிளில் சாகசம் செய்து அசத்திய தாத்தா

வயதான காலத்தில் சைக்கிளில் சாகசம் செய்து அசத்திய தாத்தா ஒருவரின் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் ஆதரவை பெற்று தற்போது செம வைரலாக பரவி வருகிறது.

1-8411657

தாத்தா ஒருவர் தனது இரண்டு கைகளை விரித்துக் கொண்டு சைக்கிளில் சாகசம் செய்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையதில் நாள்தோறும் லட்சக்கணக்கான வீடியோக்கள் வந்து குவிந்து கிடக்கின்றன. இதில் ஒரு சில வீடியோக்கள் மட்டுமே மக்களிடையே மிகவும் பிரபலமாக பார்க்கப்படுகின்றது.

மக்கள் தங்களது நேரங்களை சமூக வலைதளங்களில் செலவிடும்போது இந்த வீடியோக்களை பார்த்து ரசிக்கிறார்கள். இளைஞர்களின் வீடியோ தான் பெரும்பாலும் இணையத்தை ஆக்கிரமித்து இருக்கும். அப்படி இருக்கையில் ஒரு சில வீடியோக்கள் மட்டும் முதியவர்கள் செய்யும் அட்ரா சிட்டி தொடர்பாக இருக்கும். வயதாகிவிட்டது என்று கூறிக்கொண்டு பலரும் மூலையில் முடங்கி கிடக்கும் நிலையில் தாத்தா ஒருவர் சைக்கிளில் செம ஸ்பீடாக சொல்கிறார்.

இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த தாத்தா தனது இரண்டு கைகளை பறவை போல் விரித்துக்கொண்டு சைக்கிளை பிடிக்காமல் அவ்வளவு ஸ்பீடாக ஓட்டி செல்கிறார். அப்போது அங்கிருந்தவர்கள் சிலர் வீடியோவாக எடுத்து அதனை இணையத்தில் பகிர்ந்து உள்ளார்கள்.

இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் செம ட்ரெண்டிங்கில் உள்ளது. இதை பார்த்த பலரும் சந்தோஷமாக இருப்பதற்கு வயது ஒரு தடை இல்லை என்று கூறி வருகிறார்கள். இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…

இதையும் பாருங்க:  7 வயது சிறுமியின் சூப்பர் திறமை

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...