சொல்லிக்கொடுப்பது போல் ராகமாக பாட்டுப்பாடும் நாய்குட்டி

சொல்லிக்கொடுப்பது போல் ராகமாக பாட்டுப்பாடும் நாய்குட்டியின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.

பொதுவாக குரங்கு, நாய் போன்ற விலங்குகள் அதி புத்திசாலியாக இருப்பதும், ஆபத்து காலத்தில் அவர்களுக்குள் உதவி கொள்வதையும் தமிழ் திரையுலகில் ராம நாராயணனின் படங்களில் தான் கண்டிருப்போம். ஆனால் இப்போது உண்மையிலேயே அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது

பொதுவாக நாம் சொல்வதை கிளி தான் அப்படியே திருப்பிச் சொல்லும் என கேள்விப்பட்டிருக்கிறோம். கண்டிருக்கிறோம். நாய்களைப் பொறுத்தவரை பாதுகாவலனாக இருக்கும். ஆனால் இங்கே ஒரு நாய் ராகத்தோடு பாட முயல்வது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த இந்த சம்பவம் வட இந்தியாவில் நடந்துள்ளது. நாயை வளர்க்கும் உரிமையாளர், அதற்கு ராகத்தோடு பாட்டுப்பாட பயிற்சி கொடுக்கிறார். நாயும், அவர் சொல்வதைப் போல ராகத்தோடு பாடுகிறது.

‘வவ்..வவ்’ என குரைக்க மட்டுமே தெரிந்த நாய்..பாடல் பாடுவது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருதுங்களை இங்கே சொல்லுங்கள்

கருத்தை சொல்லுங்கள் ...

‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்