சோகத்தில் இருந்த அஜித்தை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்ன விஜய்

சோகத்தில் இருந்த அஜித்தை நேரில் சந்தித்து ஆறுதல்தெரிவித்துள்ளார் நடிகர் தளபதி விஜய். இதுகுறித்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
நடிகர் அஜித்தின் தந்தை சுப்ரமணியம் இன்று காலை இயற்கை எய்தினார். கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையும் எடுத்து வந்த நிலையில், இன்று அதிகாலை தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 85. அஜித் தந்தையின் மறைவுச் செய்தி அறிந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்படம் ஏராளமான அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்தனர்.
இதையடுத்து சென்னை பெசண்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் அஜித் தந்தையின் உடன் தகனம் செய்யப்பட்டது. தந்தையின் உடலை சுமந்து சென்ற நடிகர் அஜித், அங்கிருந்தவர்களிடம் வீடியோ எடுக்க வேண்டாம் என கைகூப்பி கேட்டுக் கொண்டார். அஜித் அங்கு வருகை தந்ததை அறிந்து ஏராளமானோர் அப்பகுதியில் குவிந்ததால் போலீஸ் பாதுகாப்பும் போடட்டப்பட்டது.

தந்தையின் உடலை தகனம் செய்துவிட்டு வீட்டுக்கு சென்ற நடிகர் அஜித்தை, நேரில் சந்தித்து நடிகர் விஜய் ஆறுதல் தெரிவித்துள்ளார். தந்தையை இழந்து வாடும் அஜித்துக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நடிகர் விஜய் ஆறுதல் தெரிவித்துவிட்டு சென்றுள்ளார். இதேபோல் நடிகரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று காலை அஜித்தின் வீட்டுக்கு சென்று அவரது தந்தை உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வந்தார்.