டீம் மேட்டை அடிக்கப் பாய்ந்த பங்களாதேஷ் வீரர் ( Video )

டீம் மேட்டை அடிக்கப் பாய்ந்த பங்களாதேஷ் வீரர் ( Video )

பங்களாதேஷ் பங்கபந்து (Bangabandhu) டி20 கிரிக்கெட் தொடர் போட்டியில் முன்னணி வீரரான முஷ்பிகுர் ரஹீம், சக வீரர் ஒருவரை தாக்க கையை ஓங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பங்க பந்து டி20 தொடரில் இப்போது 20 போட்டிகள் முடிவடைந்துள்ளன. elimineter சுற்று போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய போட்டியில் தாக்கா (Beximco Dhaka) –  பரிஷல் (Fortune Barishal) அணிகள் மோதின.  தாக்கா அணிக்கு கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராக இருப்பவர் முஷ்பிகுர் ரஹீம். இவர் விக்கெட் கீப்பிங் செய்து கொண்டிருந்த போது 17-வது ஓவரில் பரிஷல் அணி, 19 பந்துகளில் 45 ரன்கள் எடுக்க வேண்டிய சூழல் இருந்தது. பரிஷல் அணியின் அபீஃப் ஹோசைன் சிறப்பாக விளையாடிக் கொண்டிரு-ந்தார்.

அதனால் கேப்டனான முஷ்பிகுர் ரஹீம் டென்ஷனாக இருந்தார். அப்போது 17-வது ஓவரின் கடைசிப் பந்தை அபீஃப் ஹோசைன் தூக்கிஅடிக்க, அந்த பந்து எழுந்து மே லே சென்றது. அது தன்னுடைய கேட்ச் என சொல்லிக்கொண்டே ரஹீம் ஓடி வர, அந்த பந்தை பிடிக்க பீல்டரான நசுமும் ஓடி வர இருவரும் மோதிக் கொள்வது போல சென்றனர். ஆனால் இறுதி-யாக அந்த கேட்சை கேப்டன் ரஹீம் பிடித்தார்.

பந்தை கேட்ச் பிடித்தவுடன் நசூமை அடிக்க கையை ஓங்கிய படி பாய்ந்தார். பின்பு அவரை கண்டபடி வசை பாடினார். இதனைக் கவனித்த சக வீரர்கள் இருவரையும் சமாதானப்-படுத்தினர். அதன்பின்னரே பிரச்சனை கட்டுக்குள் வந்தது. இறுதியாக ரஹீமின் டாக்கா அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனாலும் பங்களாதேஷ் தேசிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும் வீரரும், மூத்த வீரருமான ரஹீமின் இந்த செயல் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. வீடியோ வை கீழே பாருங்கள் உங்கள் கருத்தை சொல்லுங்கள்

இதையும் பாருங்க:  ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் தோனிக்கு தடை? ; நடுவர்களுடன் நடந்த விவாதத்துக்கு தண்டனை

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...
‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்