தங்க. தமிழ்செல்வனை தூண்டில் போட்டு பிடித்தோம் – மு.க.ஸ்டாலின்

தங்க. தமிழ்செல்வனை தூண்டில் போட்டு பிடித்தோம் – மு.க.ஸ்டாலின்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்த தங்க.தமிழ்ச்செல்வனை தாங்கள் தூண்டில்போட்டு பிடித்ததாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

டிடிவி தினகரனின் நெருங்கிய ஆதரவாளராக இருந்த தங்க.தமிழ்ச் செல்வன் சமீபத்தில் அவரது கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். அப்போது விரைவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அழைத்து தேனியில் பிரம்மாண்ட இணைப்பு விழா கூட்டத்தை நடத்துவேன் எனத் தெரிவித்தார். அதன்படி, தேனியில் தங்க.தமிழ்ச் செல்வன் ஆதரவாளர்கள் மற்றும் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் திமுகவில் இணையும் விழா, இன்று நடைபெற்றது.

Image result for thanga tamilselvan

இந்த இணைப்பு விழா பொதுக் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், மாற்றுக் கட்சியில் தங்க.தமிழ்ச் செல்வன் இருக்கும்போதே, சட்டமன்றத்தில் தாம் பேசிய பேச்சுக்களுக்கு உடனுக்குடன் பாராட்டு தெரிவிப்பார் என்று கூறினார். அவரது திறமையை பார்த்து இவரை எப்படியாவது தூண்டில் போட்டு திமுகவிற்குள் இழுக்க தாம் முயன்றதாகவும், ஆனால் தற்போதுதான் தங்க.தமிழ்ச் செல்வன் சிக்கியதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Image result for thanga tamilselvan

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பில் எழுந்துள்ள சர்ச்சைகளை குறிப்பிட்டு பேசிய மு.க.ஸ்டாலின், ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்படாதது ஏன் எனக் கேள்வி எழுப்பினார். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக முதன் முதலில் திமுக கூறவில்லை என்றும், தற்போது துணை முதல்வராக இருக்கும் ஓபிஎஸ்தான் கூறியதாகவும் தெரிவித்த மு.க.ஸ்டாலின், ஆனால், ஓபிஎஸ் தற்போது இந்த விவகாரத்தில் அமைதி காப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதையும் பாருங்க:  சினிமாகளையே ஓவர்டேக் செய்யும் அண்ணன் தங்கை செண்டிமெண்ட்.. இணையத்தில் வைரலாகும் பாசப்போராட்ட வீடியோ..!

Related articles