தந்தையுடன் போட்டிபோட்டு தவில் வாசித்து அசத்திய சிறுவன்

தந்தையுடன் போட்டிபோட்டு தவில் வாசித்து அசத்திய சிறுவன்

தந்தையுடன் போட்டிபோட்டு தவில் வாசித்து அசத்திய சிறுவன் ஒருவரின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் ஏகோபித்த ஆதரவை பெற்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நம் கலாச்சாரங்களில் ஒன்றிப்போனதும், மங்கள நிகழ்ச்சிகளில் தவறாமல் இடம் பிடிப்பதும் மங்கள வாத்தியம். மங்கள வாத்தியங்கள் தவில் மற்றும் நாதஸ்வரத்தால் எழுப்பப்படும் இசை. கோவில்களிலும், திருவிழாக்களிலும், சாமி ஊர்வலத்திலும், திருமண வீடுகளிலும் தற்போது அரசியல் நிகழ்ச்சிகளிலும் மங்கள வாத்தியங்கள் இசைக்கப்படுகிறது.

காலையில் இதனை கேட்பதால் மனதிற்கு புத்துணர்ச்சியும், நேர்மறையான சிந்தனைகளும் ஏற்படுவதோடு நம்மை நம் கலாச்சாரத்தோடு வாழ்வதற்கு வழிவகுக்கும். மங்கள இசைகள் தென் இந்தியாவில் மிகவும் புகழ் பெற்றவை. தமிழ்நாடு, கேரளா, ஆந்திர, தெலுங்கானா மற்றும் கர்நாடகாவில் கோவில் திருவிழாக்களிலும், திருமணங்களில் தவறாது இசைக்கப்படும். இந்த இசையை வைத்து பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன.

அவ்வற்றில் இன்றும் புகழ் பெற்ற படங்கள் தில்லானா மோகனமப்பாள், கரகாட்டக்காரன், சர்வம் தாள மயம் போன்ற திரைப்படங்கள் மங்கள இசைக்கும், நாட்டியத்திற்கும் நடை பெரும் போட்ட போட்டியாக இருக்கும்.

நம் பெருமை மிகு கலாச்சாரத்தில் தவில் வாசிப்பில் மூத்த புகழ்பெற்ற தவில் வாசித்தவர்கள் திருமுலைவாயில் முத்துவீரன் பிள்ளை, திருமுலைவாயில் சண்முக வடிவேல் பிள்ளை, வலங்கைமான் சண்முக சுந்தரம் பிள்ளை, கலைமாமணி டி ஜி. முத்து குமார சுவாமி பிள்ளை, வளையப்பட்டி ஏ.ஆர். சுப்பிரமணியம் போன்றவர்கள் புகழ் பெற்ற தவில் வித்துவான்கள் ஆவர்.

இங்கே ஒரு சிறு வித்துவான் தன்னுடைய தந்தைக்கே போட்டியாக தவில் வாசித்து அசத்தியுள்ளார். அதை இங்கே காணலாம்..

இதையும் பாருங்க:  அம்மாவுடன் அழகாக சண்டை போடும் சுட்டி குழந்தை

Related articles