தனது குழந்தைக்காக ரோலர் கோஸ்டராக மாறிய தந்தை

தனது குழந்தைக்காக ரோலர் கோஸ்டராக மாறிய தந்தை ஒருவரின் வீடியோ இணையத்தில் வெளியாகி செம வைரலாக பரவி வருகிறது.

ஆனந்த யாழை மீட்டுகிறாள் என் நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாள்…..ஆம் இந்த காணொலியில் உள்ள தந்தைக்கு கண்டிப்பாக இந்த பாடல் பொருந்தும். பாடலாசிரியர் நா.முத்துக்குமார் எழுதிய பாடல் வரிகளை ரசிக்காத உள்ளங்கள் இல்லை. பெண் குழந்தைகளை பெற்ற தந்தைக்கு இப்பாடல் மிகவும் பிடிக்கும். தந்தை மற்றும் லிட்டில் பிரின்சஸ் அவர்களின் தேசிய கீதம் இந்த பாடல். தந்தை ஒரு மகளின் புன்னகையை தெய்வத்திற்கு ஈடாகவும், வானத்து நிலவு சின்னதாக தெரியும் என்று தன் மகளிடம் கொண்ட அன்பினை வெளிப்படுத்தும் இந்த பாடல். மகளின் சின்ன சின்ன ஆசைகளையும் நிறைவேற்றும் தந்தைக்கு அவர்களால் முடியாது என்று கூறுவதில் சங்கடம் ஏற்படும் மகளின் ஒரு சில விருப்பங்களை நிறைவேற்றுவதில்.

அவர்களுக்கு வேண்டியவற்றையும், விரும்புவனவற்றையும் நிறைவேற்றுவதில் தந்தைக்கு நிகர் தந்தை தான். கோடைகால விடுமுறைக்கு அனைவரும் வெளி இடங்களுக்கு செல்ல விரும்புவார்கள். அதிலும் தீம் பார்க் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை திகிலோடும், திகைப்போடும், புது வித உலகத்தில் சஞ்சாரம் செய்வது போல் தோன்றும். அதிகமாக தண்ணீரில் விளையாடும் விளையாட்டுகளையும், சறுக்கி செல்லும் விளையாட்டையும், உயரத்தில் இருந்து திகிலோடு அந்தரத்தில் பறக்கும் விளையாட்டுகளையும் மக்கள் பெரிதும் விரும்புவார்கள். ஒரு சில விளையாட்டுகளில் குழந்தைகள் அனுமதிக்கப்படுவதில்லை. குறிப்பிட்ட வயதினருகே அனுமதி ஒரு சில விளையாட்டுகளில் கட்டாயம் இருக்கும்.

வேறு உலகத்திற்கு கூட்டி செல்லும் இந்த பூங்காவிற்கு சென்றால் ஒரு நாள் இவ்வளவு தொகை என்று செலுத்த வேண்டி இருக்கும். அப்படி செல்லும் போது குறிப்பிட்ட சில விளையாட்டுகளுக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். இப்படி ஒரு தந்தை வாய்த்தால் ஒரு பைசா கூட செலவில்லாமல் தீம் பார்க் சென்று விளையாட வேண்டிய விளையாட்டுகளை வீட்டில் இருந்தே விளையாடிவிடலாம்.

தன் மகளை மகிழ்விக்க செய்த தந்தையின் செயல் சமூகவலைத்தளவாசிகளை பெருமையடைய செய்துள்ளது. இந்த ஆண்டிற்கான சிறந்த தந்தைக்கான விருது இவருக்கு தான்…….என்று அவரை பாாட்டி கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்……லிட்டில் பிரின்சஸ்ஸுக்காக தந்தை தனது மடியில் தீம் பார்க்கையே கொண்டுவந்து விட்டார். மனதை மகிழ்விக்கும் அந்த கானொலியை இங்கே காணலாம்..

உங்கள் கருதுங்களை இங்கே சொல்லுங்கள்

கருத்தை சொல்லுங்கள் ...

‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்