தனது குழந்தையை காக்க மின்னல் வேகத்தில் அம்மா செய்த செயல்… அம்மாவை விட பெரிய சக்தி உலகில் வேறெதுவும் இல்லை என உணர்த்திய பதிவு..!

தனது குழந்தையை காக்க மின்னல் வேகத்தில் அம்மா செய்த செயல்லின் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

‘அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே’’ என்னும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்–தின் பாடல் வரிகளுக்கு ஏற்ப இந்த உலகத்தில் அம்மாப்பாசம் இல்லாத உயிரினங்களை இருக்காது. இந்த உலகில் ஈடு செய்யவே முடியாத பாசம் தான் அம்மாப்பாசம்!
மனிதர்கள் மட்டும் தான் தங்கள் பிள்ளைகளிடம் அந்த பாசத்தைக் காட்டுவார்களா? என்றால் நிச்சயமாக இல்லை. நம் வீட்டுப் பக்கத்தில் குட்டிப் போட்டிருக்கும் பூனையோ, நாயோ கூட தங்களின் குட்டியின் அருகில் நம்மை விடுவதில்லை. அதுதான் அம்மாப்பாசம்! சகல ஜீவன்களிலும் தங்கள் தாயை நேசிக்காதவர்களே யாரும் இருக்க மாட்டார்கள்.

எப்போதுமே அம்மா பாசத்துக்கு பணம் ஒரு பொருட்டாகவும், தடையாகவும் இருந்ததே கிடையாது. அதனால் தான் சினிமாவில் எஸ்.ஜே.சூர்யா, ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம். அம்மாவை வாங்க முடியுமா என பாடல் வைத்தார். அந்த அளவுக்கு அம்மா பாசம் உயர்ந்தது. அதை அப்படியே கண் முன்பு கொண்டுவந்து நிறுத்துவது போல் இப்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது.
ஒரு உணவகம் ஒன்றின் மாடியில் தாயும், பிள்ளையும் நின்று கொண்டிருந்தனர். யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பிள்ளை மாடியில் இருந்த சிறிய இடைவெளி வழியே நுழைந்தது. உடனே பிள்ளை கீழே விழ போனது. இதை அருகில் இருந்து கவனித்த அம்மா மின்னல் வேகத்தில் செயல்பட்டு பிள்ளையின் ஒரு காலைப் பிடித்தார். இதைப் பார்த்த அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து அந்த அம்மா நடத்தும் போராட்டத்தைப் பார்த்துவிட்டு அவர்களும் சேர்ந்து கைப்பிடித்து பிள்ளையை தூக்கிவிட்டனர். மின்னல் வேகத்தில் செயல்பட்டு அம்மா, பிள்ளையைக் காப்பாற்றிய காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது.