தனது திருநங்கை காதலியை அம்மி மிதிச்சு, அருந்ததி பார்த்து, பெற்றோர் ஆசியுடன் கல்யாணம் செய்த இளைஞர்; குவியும் பாராட்டுக்கள்…!!

நமது சமூகத் தில் திருநங்கைகள் என்றால் மிகவும் பேசப்பட்டும் கேலி கிண்டலுக்கும் ஆளாகி வந்தார்கள்.திருநங்கையாக பிறந்தது அவர்களது தவறில்லை மேலும் இது ஒரு இறைவனின் படைப்பு இவர்களை நாம் மதிக்கவேண்டும்.கேலி கிண்டலுக்கு அவர்களே ஆளாகாமல் அவர்களின் வாழ்க்கையில் முன்னேற செய்வதற்கு வழிவகை செய்ய வேண்டும்.ஆனால் முன்பை விட தற்போது திருநங்கைகளுக்கு மதிப்பும் மரியாதையும் சற்று அதிகமாக சமுதாயத் தில் உள்ளது.மேலும் அவர்கள் மீது உள்ள தவறான எண்ணத்தை உடைக்கும் வகையில் அவர்களும் ஏதாவது ஒரு துறையில் சாதித்து கொண்டேதான் இருக்கிறார்கள்.இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த ஒரு திருநங்கையை காதலித்து கல்யாணம் செய்துள்ளார்.

திருநங்கையான ரியா (25) சென்னையில் தங்கியிருந்து வேலைபார்த்து வந்தார்.அப்போது தான் சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த மனோவுடன் ரியாவுக்குப் பழக்கம் ஏற்பட்டது.நாளடை வில், இருவரின் அன்பு பரிமாற்றம் காதலால் ஈர்க்கப்பட்டது. காதல் வயப்பட்ட மனோவும், ரியாவும் தங்கள் வாழ்க்கையை உறுதிசெய்ய தீர்மானித்தனர்.
மனோவின் பெற்றோர் இந்த கல்யாணத்திற்கு தடையாக இருப்பர் என்ற எண்ணம் இருவரு க்குள்ளும் இருந்தது.இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட உளுந்தூர்பேட்டையில் வாடகை வீடெடுத்து இருவரும் குடிபெயர்ந்தனர்.தொடர்ந்து கல்யாணம் செய்து புதுமண வாழ்க்கையை தொடங்க முடிவு செய்த இவர்கள், தங்களின் நண்பர்கள், அயல்வாசிகள் மூலம் அதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

தமிழகம் முழுவதும் இருந்து தகவல் அறிந்து திருநங்கைகள் கல்யாணத்திற்கு நேரில் வந்திருந்தனர்.நண்பர்களால் பிளெக்ஸ், பேனர், சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு கல்யாணத்திற்காக அழைப்பிதழ் விடுக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து அக்டோபர் 27ஆம் தேதி மனோ – ரியா ஆகிய இருவருக்கும் அம்மி மிதிச்சு, அருந்ததி பார்த்து, மங்கள வாத்தியங்கள் முழங்க கல்யாணம் தடபுடலாக நடந்தது.மணமக்களை அனைத்து நட்புகளும், அக்கம்பக்க உறவுகளும் வாழ்த்திச் சென்றனர்.