தனது முதலாளியிடம் நக்கல் செய்த நாயின் வீடியோ இணையத்தில் வைரல்

தனது முதலாளியிடம் நக்கல் செய்த நாயின் வீடியோ இணையத்தில் வைரல்

தனது முதலாளியிடம் நக்கல் செய்த நாயின் வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து செம வைரலாக பரவி வருகிறது.

செல்லப் பிராணிகளை வளர்ப்பதை இன்று பலரும் வழக்கமாக வைத்துள்ளனர். அவை தங்கள் எஜமானர்களின் ஆபத்து காலங்களில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் அவர்களை அதில் இருந்து மீட்பதையும் நாம் பார்த்து வருகிறோம். பாம்பை கடித்துக் கொன்று தானும் இறந்து போன நாய் தொடங்கி, தங்கள் உரிமையாளர்களுக்காக உயிரையே விட்ட பலரைப் பார்த்திருக்கிறோம்.

இங்கேயும் அப்படித்தான் ஒரு தரமான சம்பவம் நடந்துள்ளது. பொதுவாகவே செல்லப் பிராணிகள் வளர்ப்பில் பூனைக்கு முக்கிய இடம் உண்டு. பூனை அதிகளவில் பலராலும் விரும்பப்படும் செல்லப் பிராணியாக இருக்கிறது. பொசு, பொசுவென பார்க்க அழகாக இருப்பதால் பூனையை பலருக்கும் பிடிக்கும். அதேபோல் பலரும் செல்லப்பிராணி என்றாலே நாய் வளர்ப்புக்குத் தான் பிரதான முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இங்கேயும் ஒருவர் தன் வீட்டில் பாசமாக ஒரு நாய் வளர்த்து வந்தார்.

அந்த நாய் பயங்கர திமிர் பிடித்த லொள்ளு பிடித்த நாயாகவும் இருக்கிறது. தன் எஜமானாருக்கு காலில் அடிபட்டு கட்டு போட்டிருக்கிறார். அதனால் அவர் ஒரு காலை கிந்தி, கிந்தி நடக்கமுடியாமல் நடக்கிறார். அதைப் பார்த்த நாயானது தானும் ஒரு காலைத் தூக்கிக்கொண்டு அதேபோல் நடக்கிறது. ஆனாலும் இந்த நாய்க்கு ஓவர் நக்கலுப்பா என நெட்டிசன்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.

இதையும் பாருங்க:  திருக்கை மீனுக்கு பிரசவம் பார்த்த வாலிபர்கள்..

Related articles