தன்னை காப்பாற்றிய அரசு ஊழியருக்கு தனது பாணியில் நன்றி செலுத்திய குட்டியானை

தன்னை காப்பாற்றிய அரசு ஊழியருக்கு தனது பாணியில் நன்றி செலுத்திய குட்டியானை

கூகிள் செய்தியிலும் எங்கள் செய்தியை படிக்கலாம் Follow Now

மனுஷர்களை விட மென்மையும், பாசமும் கொண்டவை விலங்குகள். அதை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு நிகழ்வு நம் தமிழகத்தில் நடந்துள்ளது.

பொதுவாகவே விலங்குகள் மூர்க்க குணம் கொண்டவை என்றே நாம் சொல்லி வழக்கப்பட்டு உள்ளோம். ஆனால் அவைகளை நாம் தொந்தரவு செய்யாதவரை, அவை நம்மிடம் அன்பு மழை பொழியக் கூடியவை தான். தமிழில் பிரபல திரைப்பட இயக்குநர் ராமநாராயணனின் பல படங்களிலும் யானை, நாய், குரங்கு, ஏன் பாம்பு கூட குழந்தைகளுக்கு உதவுவது போல் காட்சிகள் வரும்.

ஹாலிவுட்டிலும் ஒரு பெண்ணின் மீது கிங்காங் பாசம் காட்டுவதும், ஜங்கிள்புக் சீரியலில் குழந்தை காட்டுக்குள் வளர்வதையும், விலங்குகள் அதனுடன் நேசம் காட்டுவதையும் நாம் பார்த்திருப்போம். அதிலும் மதம் பிடித்துவிட்டால் கோபம் கொக்கரிக்கும் யானைகள் நிஜத்தில் அவ்வளவு சாந்த சொரூபமானவை. அதிலும் தன் மேல் பாசம் வைப்பவர்களிடம் மிகவும் நெருங்கிய உறவில் இருக்கும்.

இங்கேயும் அப்படித்தான் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. காட்டில் இருந்து குட்டி யானை ஒன்று சின்ன காயங்களுடன் தன் தாயைத் தேடி அலைந்து வந்தது. அந்தக் குட்டியானையை நம் தமிழகத்தின் வனத்துறை அதிகாரிகள் பார்த்தனர். வனத்துறை ரேஞ்சர் பிரசாத் என்பவர் அந்தக் குட்டியானை மிகவும் பாசத்தோடு உடன் இருந்து பார்த்து அந்தக் குட்டியானையின் உடலினைத் தேற்றியிருக்கிறார். தொடர்ந்து தாய் யானையைத் தேடி வனத்துறை அதிகாரிகள் அலைந்தனர். அவரது பின்னால் ஒரு பூனைக்குட்டியைப் போல் இந்த குட்டியானை பாசம் ததும்ப சென்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கூடவே அந்த குட்டியானை வனத்துறை அதிகாரிகளை விட்டுச் செல்லும் போது தன்னிடம் பாசமாக இருந்த பிரசாத் என்ற ரேஞ்சரை அவரின் காலை துதிக்கையில் அணைத்து விடைபெறுகிறது. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்கள்..

இதுபோன்ற சிறப்பான , தரமான செய்திகளை டெலிக்ராம் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள் Join Now

கூகிள் செய்தியிலும் எங்கள் செய்தியை படிக்கலாம் Follow Now

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!