தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்து 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிவிப்பில் , தென்மேற்கு வங்க கடலில் இலங்கைக்கு கிழக்கே நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்க-ளில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்-ளது.
16 மற்றும் 17ஆம் தேதி-களில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்க-ளில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்-களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடு மென குறிப்பிடப்-பட்டுள்ளது.
சென்னை நகரில் அடுத்த இரு 2 நாட்களுக்கு வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்-கூடும் என்றும் தெரிவிக்கப்-பட்டுள்ளது.