தமிழக இளைஞர் கண்டுபிடித்த நவீன டிஜிட்டல் அம்மி

தமிழக இளைஞர் கண்டுபிடித்த நவீன டிஜிட்டல் அம்மி

தமிழக இளைஞர் கண்டுபிடித்த டிஜிட்டல் அம்மியின் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையவாசிகளை கவர்ந்து வைரலாக பரவி வருகிறது.

முப்பது வருடங்களுக்கு முன்பு பெண்கள் ஓய்வின்றி உழைத்து கொண்டிருந்தார்கள். வீட்டிலும், விவசாய நிலங்களிலும், வேலைகள் அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் சிறிது கூட ஒய்வு இல்லாமல் ஆண்களுக்கு நிகராக பெண்களும் வேலைப்பளுவினால் திண்டாடினர்.

அதிகாலை எழுந்து வீட்டில் முற்றம் தெளித்து, கோலம் இட்டு, ஆடு, மாடுகள் வளர்த்தால் கால்நடைகள் இருக்கும் பகுதியை சுத்தம் செய்து, கால்நடைகளுக்கான தீனி கொடுத்து, வீட்டில் உள்ள அனைவருக்கும் காலை உணவினை செய்ய ஆரம்பிப்பார்கள். தற்காலம் போன்று எந்த அடிப்படை வசிதியும் இல்லாமல் விறகு அடுப்பில் சமைப்பார்கள். சமையல் செய்வதற்கு தேவையான பொருட்களை அம்மியில் அரைத்து சமையலுக்கு பயன்படுத்துவார்கள். இது போல் மதிய உணவையும் அம்மியில் அரைத்து சமையல் செய்வார்கள். அம்மியில் மிளகு, மிளகாய் கொண்டு அரைக்கும் போது கைகளால் அதிக காரம் கொண்ட பொருட்களை அரைக்கும் போது கைகள் மிகவும் எரியும்.

அது போக வீட்டில் உள்ள பாத்திரங்கள், துணி மணிகளை கைகளால் துவைப்பார்கள். இது போக மீதம் இருக்கும் நேரத்தில் விவசாய பணிகளை மேற்கொள்வார்கள். அல்லும், பகலும் ஓய்வின்றி அந்தக்காலத்து பெண்கள் 80 மற்றும் 80-பதிற்கு முற்பகுதி காலகட்டத்தில் உள்ள பெண்கள் அதிக வேலை பளுவால் சிரமத்தை மேற்கொண்டனர். இதனால் அவர்கள் சுறு சுறுப்பாகவும், மெலிந்த உடலோடும், எந்த வித நோய் இல்லாமல் ஆரோக்கியமான வாழ்வை வாழ்ந்தார்கள்.

இதையும் பாருங்க:  ஆண்களே இந்த ராசிக்கார பெண்களிடம் உஷாரா இருங்க

அம்மியில் அரைத்து சமையல் செய்யும் போது ஊரே மணக்கும் அளவிற்கு சமயல் ருசியாகவும், ஆரோக்கியமானதாகவும் இருந்தது. மாவு அரைப்பதற்கு, ஆட்டுஉரல் , குளவி உபயோகப்படுத்தினார்கள்,அரிசி மாவு இடிப்பதற்கும், சுக்கு போன்ற பொருட்களை இடிப்பதற்கும் உலக்கை பயன்படுத்தினார்கள். தற்கால 2k-கிட்ஸ் எல்லாம் இதை பார்த்திருப்பது அபூர்வமானது. இன்னும் ஒரு சில வீடுகளில் தமிழரின் வாழ்வில் இணைந்த பாரம்பரிய பழக்கவழக்கங்கள் விட்டு போய்விட கூடாது என்பதற்காக இன்றும் வீடுகளில் இது போன்ற பொருட்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

புதிதாக வீடுகள் அமைக்கும் போது தனியாக வீட்டின் பின் புறத்தில் சிறிய குடில் ஒன்றை உருவாக்கி இந்த பொருட்களை பயன்படுத்தும் பெண்கள் இருக்கிறார்கள். தற்போது நவீன அம்மி ஓன்று சமூகவலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த அம்மியை கைகளால் அரைக்க தேவையில்லை, அம்மியின் குழவியில் இரு புறமும் மரத்தால் ஆன பிடிப்பை மாட்டி அதனை ஒரு இஞ்சினில் பொருத்தி இருக்கிறார்கள். அந்த இஞ்சின், இயங்கும் போது அந்த குழவி முன்னாலும் பின்னாலும் அம்மியில் உள்ள பொருட்களை நன்றாக அரைக்கிறது. அந்த நவீன காலத்து அம்மியை இங்கே காணலாம்…..

One thought on “தமிழக இளைஞர் கண்டுபிடித்த நவீன டிஜிட்டல் அம்மி

  1. Intha machine la production value kammi
    And safety kammi output quality kammi totala intha machine waste
    5kg ku Mela irukka Kalla front and back move panna agura power (current or engine nu soltranal petrola irunthathum) bladea rotary motionla move panna agura powera Vida athigam machine oda efficiencyum kammi 😌

கருத்தை சொல்லுங்கள் ...