தமிழில் வீடியோகால் பேசி அசத்தும் கிளி

தமிழில் வீடியோகால் பேசி அசத்தும் கிளி

Follow us on Google News Click Here

தமிழில் வீடியோகால் பேசி அசத்தும் கிளி வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

ஒருவர் ஒரே விசயத்தை திரும்ப, திரும்பப் சொன்னால் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை என கிராமத்தில் பழமொழி சொல்வதைக் கேள்வி பட்டிருப்போம். அப்படி சொல்வது போலவே கிளி நன்றாக பேசக் கூடிய பறவை.

நம்ம இனத்தையும், பிற உயிரினங்களையும் வேறுபடுத்திக் காட்டுவதே நம் பேச்சுத்திறன் தான். அந்த வகையில் நம்மர்களுக்கு இணையாக கிளிகளும் முறையான பயிற்சி எடுத்துக் கொண்டால் பேசக் கூடியவைதான். கிளிகளைப் பொறுத்தவரை நாம் ஒரு விசயத்தை சொல்லிக்கொடுத்தால் ஞாபகமாக வைத்திருக்கும். அப்படியே சொல்லியும் காட்டும். அந்தவகையில் கிளி நம்மர்களோடு மிகவும் நெருக்கமாக வாழும் பிராணி ஆகும்.

இங்கேயும் அப்படித்தான். ஒருவர் தன் வீட்டில் கிளி வளர்க்கிறார். பொதுவாக கிளி மிகவும் புத்திக்கூர்மை மிக்கது. தான் வளர்க்கப்படும் வீட்டில் இருக்கும் அனைவரிடமும் மிகவும் அன்பாகப் பழகக் கூடியதும் ஆகும். இந்த வீட்டில் பெண் சொல்லிக்கொடுத்தது போலவே நம் அழகு தமிழில் கிளி சரமாரியாகப் பேசுகிறது. கூடவே நம்மர்களைப் போலவே அந்தக் கிளி காணொளி காலும் பேசுகிறது.

அந்த காணொளி காலில் தன்னை வளர்க்கும் பெண்ணிடம் என்னை ஏன் விட்டுவிட்டுப் போனாய் எனக் கேட்கிறது. அதற்கு அந்தப்பெண் காய்கறியும், பழங்களும் வாங்கப் போனேன். அம்மா, உனக்கு எல்லாமே வாங்கிட்டு வர்றேன். எனச் சொல்ல, மீண்டும் என்னை ஏன் விட்டுவிட்டுப் போன எனக் கேட்கிறது. உடனே அம்மா கொஞ்ச நேரத்தில் வந்துடுவேன் என சமாதானம் செய்கிறார் அந்தப் பெண். கிளி அழகாஆப் பேசும் இந்த காணொளிவை நீங்களே பாருங்கள். கடைசியாக செல்லமாக ஒரு முத்தமும் கொடுக்கிறது கிளி…

Follow us on Google News Click Here

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!