திருமணத்தில் சிலம்பம் சுற்றி மாஸ் காட்டிய மணப்பெண்

திருமண ஊர்வலத்தில் சிலம்பம் சுற்றி மாஸ் காட்டிய மணப்பெண்ணின் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

தமிழகத்தில் கல்யாணக்கோலத்தில் கல்யாண பொண்ணு இரண்டு கைகளில் சிலம்பம் மற்றும் சுருள் வாள் வீசி அசத்திய வீடியோ வைரலாகி வருகிறது.

தூத்துக்குடியின் தேமான்குளத்தைச் சேர்ந்த ராஜ்குமார் – நிஷா தம்பதிக்குத் கல்யாணம் சிறப்பாக நடந்த நிலையில் மணமக்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
அப்போது, மணப்பெண் நிஷா, மணக்கோலத்திலேயே இரண்டு கைகளில் சிலம்பத்தைச் சுற்றி அசத்தினார்.
பாரம்பரியக் கலையான சுருள் வாள் வீசியும் கல்யாணத்திற்கு வந்திருந்த சொந்தங்களை வாயடைத்துப் போக வைத்தார்.

மணப்பெண் நிஷாவின் அசாத்திய செயலை அங்கிருந்தவர்கள் பிரமிப்போடு பார்த்து கைதட்டி ரசித்தார்கள். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.