தள்ளாடும் வயதிலும் தளராத காதல்

தள்ளாடும் வயதிலும் தளராத காதல்

Follow us on Google News Click Here

தள்ளாடும் வயதிலும் தனது மனைவியை தூக்கி சுமக்கும் வயது முதிர்ந்த கணவனின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையவாசிகளை கவர்ந்துள்ளது.

புருஷன், பொண்டாட்டி பாசம் வார்த்தைகளால் விவரிக்கவே முடியாதது. இன்று பலரும் அந்த அன்பின் மேன்மை புரியாமலேயே வாழ்க்கையை ஓட்டுகின்றனர்.அதனால் தான் சின்ன, சின்ன விசயங்களுக்கெல்லாம் எமோஷனல் ஆகி விவகாரத்து வரை சென்றுவிடுகின்றனர்.

ஆனால் புருஷன், பொண்டாட்டி உறவு என்பது முழுக்க அன்பால் மட்டுமே கட்டுப்பட்டது. அதற்கு பணம், காசு இருக்கிறதா என்னும் கவலையோ அல்லது, அழகோ ஒரு விசயமே இல்லை. அதை உணர்ந்து கொண்டவர்கள் வாழ்வு வரமாகி விடுகிறது. இங்கேயும் அப்படித்தான் ஒரு தாத்தா, தன் பொண்டாட்டியின் மீது ரொம்ப பாசம் வைத்திருக்கிறார். அந்தப் பாட்டியால் நடக்கமுடியவில்லை. அவருக்கோ பாட்டியை ஆட்டோவில் அழைத்துச் செல்லும் அளவுக்கு வசதியில்லை. உடனே பாட்டியை தான் போகும் இடமெல்லாம் தூக்கிக் கொண்டு செல்கிறார் பாட்டி. தாத்தா

வாலிபங்கள் ஓடும். வயதாகக் கூடும். ஆனாலும் அன்பு மாறாதது என திரைப்படத்தில் வரும் பாடல் வரி அப்படியே நிஜமானது போல் இருக்கிறது. இதோ நீங்களே இந்த வீடியோவைப் பாருங்களேன்.

Follow us on Google News Click Here

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!