தாய்ப்பாசத்தில் கோழி செஞ்ச வேலை

தாய்ப்பாசத்தில் கோழி செஞ்ச வேலை

Follow us on Google News Click Here

தாய்ப்பாசத்தில் கோழி செஞ்ச வேலை குறித்த வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

அன்பு என்பது மனுஷர்களுக்கு மட்டுமானது அல்ல. அது, அனைவருக்கும் பொதுவானது. அதிலும் அம்மா அன்பு என வந்துவிட்டால்? மனுஷன் என்ன பிராணி என்ன? இங்கேயும் அப்படித்தான்…ஒரு கோழி அம்மாப்பாசத்தில் செய்யும் செயல் இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது.

ஆயிரம் பேர் நம்மேல் அன்பு வைத்தாலும் பெற்ற அம்மா நம் மீது வைத்திருக்கும் பாசத்துக்கு அதில் ஈடுசொல்லவே முடியாது. அதனால் தான் ஒவ்வொரு மனுஷனின் வாழ்விலும் அம்மாக்கள் எப்பவுமே ஸ்பெசலாகி விடுகின்றனர். இங்கும் அப்படித்தான் தன் குஞ்சுகள் மீது அன்பு காட்டும் ஒரு கோழியின் வீடியோ எத்தனை முறைப் பார்த்தாலும் சலிக்காது.

நாட்டுக்கோழி ஒன்று தன் குஞ்சுகளுடன் மேய்ந்து கொண்டிருந்தது. இதை நோட்டம்விட்ட பருந்து ஒன்று வேகமாக வந்து கோழிக்குஞ்சைத் தூக்கிச்செல்ல முயன்றது. இதைப் பார்த்துவிட்ட கோழி பருந்தைப் பிடித்து இழுத்து அதன் கழுத்தில் தன் காலை வைத்து நசுக்கியது. பருந்தால் அதில் இருந்து மீண்டுவர முடியவில்லை.

ஒருகட்டத்தில் பருந்து டயர்ட் ஆக விடாத கோழி அதை தன் கூர்மையான அலகால் தொடர்ந்து குத்தியது. இதில் பருந்து நிலைகுலைந்து ஒருகட்டத்தில் கோழியை சமாளிக்கவே முடியாமல் எழுந்து பறந்தது. குறித்த இந்த வீடியோ அம்மாப்அன்பு என வந்துவிட்டால் எவ்வளவு பலம் வாய்ந்த நபராக இருந்தாலும் வீழ்த்திவிடலாம் என்பதைக் காட்டுவதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.

Follow us on Google News Click Here

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!