தாய் பறவையே டாக்டராக மாறி சிசேரியன் பண்ணும் காட்சி இணையத்தில் வைரல்

தாய் பறவையே டாக்டராக மாறி சிசேரியன் பண்ணும் காட்சி ஓன்று இணையத்தில் வெளியாகி செம வைரலாக பரவி வருகிறது.

இந்த அற்புதமான உலகத்தில் நம்மால் பார்க்க வேண்டிய பல விஷயங்கள் கொட்டி கிடக்கின்றன.அதனை நேரில் காண முடியாது என்றாலும் அந்தந்த ஆச்சர்யங்களை எல்லாம் நம்மால் வீட்டில் இருந்தபடியே பார்க்க முடிகிறது இணையதளம் வாயிலாக.
அந்த வகையில் தன்னுடைய முட்டையை அடை காத்த கோழி ஒன்று, அந்த முட்டையில் இருந்து வெளி வர முயற்சிக்கும் தன்னுடைய குழந்தைக்கு சிசசரியன் பார்க்கும் விதமாக அந்த குஞ்சு வெளி வர ஏதுவாக முட்டையின் மேல் பாகத்தை மெல்ல மெல்ல கொத்தி உடைத்து கோழி குஞ்சு வெளி வர உதவுகிறது.
இந்த காணொளி இணையத்தில் மிகவும் அரிதான காட்சி என்று பார்வையாளர்களால் பகிரப்பட்டு வருகிறது.