திருமண நிச்சயதார்த்தத்தில் மாப்பிள்ளையின் சகோதரிகள் போட்ட செம டான்ஸ்

திருமண நிச்சயதார்த்தத்தில் மாப்பிள்ளையின் சகோதரிகள் போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையவாசிகள் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.

இப்போதெல்லாம் திருமண நிகழ்வுகளை ஆட்டம் பாட்டம் என்று மாறிவிட்டது. முன்பெல்லாம் திருமண நிகழ்வுகளில் வீட்டில் உள்ள சிறுவர்கள் நடனமாடுவார்கள் அதனை பெரியவர்கள் சுற்றி அமர்ந்து கைதட்டி ரசித்து பார்ப்பார்கள். ஆனால் இப்போதோ பெரியவர்களும் நடனமாடினர் மேலும் மணப் பெண்ணும் மண மகளும் கூட இப்போது நடனமாடுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. அந்த வகையில் திருமணம் நிகழ்வு ஒன்றில் மாப்பிள்ளையின் சகோதரிகள் போட்ட ஆட்டம் தான் இன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.
தளபதி விஜய் நடிப்பில் வெளியான அழகிய தமிழ் மகன் படத்தில் இடம் பெற்ற பாடல் மதுரைக்கு போகாதடி. அந்த பாடலுக்கு தான் இங்கு இளம்பெண்கள் சிலர் நடனமாடி தனது சகோதரனை மணமேடைக்கு அழைத்து வருகின்றனர். பாட்டுக்கு ஏற்றார்போல் அழகாக நடனமாடி இணையவாசிகளை ரசிக்க வைத்துள்ளனர் இணையவாசிகள் பலரும் அவர்களது நடனத்தை பாராட்டி பல கருத்துக்களை கருத்து பெட்டியில் தெரிவித்து வருகின்றனர். நீங்களும் அவர்களது நடனம் குறித்த உங்கள் பார்வைகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் இங்கே. அந்த நடனம் உங்களுக்காக இங்கே இணைக்கப்பட்டுள்ளது.