தீவு போல் மிதக்கும் பிரமாண்ட கப்பல்.. இணையத்தை கலக்கி வரும் காட்சி..!

தீவு போல் மிதக்கும் பிரமாண்ட கப்பல்.. இணையத்தை கலக்கி வரும் காட்சி..!

கூகிள் செய்தியிலும் எங்கள் செய்தியை படிக்கலாம் Follow Now

தீவுகளுக்குச் சென்று கடற்கரையோரம் நின்று கடற்கரையை ரசிப்பது தனி சுகம். இதற்காகவே வெளிநாட்டு பணக்காரர்-கள் பல்வேறு தீவு தேசங்களுக்குச் சென்று பொழுதைக் கழிக்கிறார்-கள். இப்படி இயற்கையை விரும்பும் பணக்காரர்-களைக் குறி வைத்து 2012-ம் ஆண்டில் இறங்கியது இங்கிலாந்தைச் சேர்ந்த ‘யாட் ஐலண்ட் டிசைன் கம்பெனி’.

பிரமாண்ட கப்பல் :
பல கோடி செலவில் ‘ட்ராபிக்கல் ஐலண்ட் பாரடைஸ்’ என்ற மெகா சொகுசுக் கப்பலை உருவாக்கும் பணியை இந்நிறுவனம். இக்கப்பலின் மாதிரி படங்-களை வெளியிட்டபோதே அது மிரட்டல் ரகங்களாக இருந்தன. பார்ப்பதற்கு ஒரு தீவை வடிவமைத்து கடலில் விட்டது போல இருந்தது கப்பல் மாதிரி படங்-கள். 90 மீட்டர் நீளத்துக்கு அமைக்கப்பட உள்ள இக்கப்பல், 15 நாட்ஸ் வேகத்தில் பயணிக்கும் திறன் பெற்றிருக்கும்.

கப்பல் மேல் தளத்தில் கடற்கரையில் இருப்பது போல சிறு சிறு குடில்-கள், அதற்குக் கீழ் சாய்வு நாற்கலி-கள், அருகிலேயே பெரிய நீச்சல்குளம், தென்னை மரங்-கள், அருவியிலிருந்து நீர் கொட்டி நீச்சல் குளத்துக்கு வருவது போல செட்டப்பு-கள் என ஒரு தீவுக்கு உண்டான சகலமும் இக்கப்பலில் கொண்டு வர இறக்கிறார்-கள்.

வி.ஐ.பி.க்-களை மனதில் கொண்டு அவர்களுக்கென கப்பல் மேலே பால்கனி-கள் அமைக்க இருக்கிறார்-கள். இக்கப்பலில் ஹெலிகாப்டர்-கள் இறங்க வசதியாக ஹெலிபேடும் இருக்கும் என வசதி-கள் பற்றி பட்டியலை வெளியிட்டுள்ளது அந்நிறுவனம்.

இவ்வளவு வசதிகளுடன் உருவாகும் இக்கப்பல் எவ்வளவு ரூபாய் மதிப்பீட்டில் தயாராகிறது என்ற விபரத்தையும், இந்த சொகுசுக் கப்பலில் பயணம் செய்ய எவ்வளவு பணம் செலவாகும் என்ற விபரத்தை இதுவரை அந்நிறுவனம் வெளியிடவில்லை. ஆனால், பணக்காரர்-கள் மட்டுமே இதில் பயணிக்க முடியும் என்பது மட்டும் நிதர்சனம்!

இதுபோன்ற சிறப்பான , தரமான செய்திகளை டெலிக்ராம் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள் Join Now

கூகிள் செய்தியிலும் எங்கள் செய்தியை படிக்கலாம் Follow Now

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!