தேச பக்தியில் முன்னாள் ராணுவ வீரர் செய்த வேற லெவல் செயல்

தேச பக்தியில் முன்னாள் ராணுவ வீரர் செய்த வேற லெவல் செயல்

தேச பக்தியில் முன்னாள் ராணுவ வீரர் செய்த வேற லெவல் செயல் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தேசபக்தி என்பது மிகவும் முக்கியமான விசயம். நம்நாடு மிக நீண்ட, நெடிய போராட்டங்களுக்கு பின்பு இப்போது மீண்டிருக்கிறது. வணிகத்திற்காக வந்த ஆங்கிலேயர்கள் நம் நாட்டை அடிமைப்படுத்தினர். சுதந்திரம் என்னும் சுடரில் பலரும் தங்கள் இன்னுயிரைத் துறந்தே நாட்டு விடுதலையை சாத்தியமாக்கினர்!

நம் நாடு அன்னியர்களிடம் இருந்து விடுதலைக்காற்றை சுவாசித்து முழுதாக 75 ஆண்டுகள் ஆகிறது. இதைக் கொண்டாடும்வகையில் பிரதமர் நரேந்திர மோடி வரும் 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதிவரை அனைத்து இல்லங்களிலும் தேசியக்கொடியை ஏற்றச் சொன்னார். ஆனால் அதனினும் ஒருபடி மேலேபோய், சுதந்திர வேள்வியில் தன் தேசப்பற்றை முத்தாய்ப்பாகக் காட்டுகிறார் அய்யலுசாமி.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகில் உள்ள கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர் அய்யலுசாமி. இவர், 1970 முதல் 1980 வரை 16 ஆண்டுகள் இந்திய ராணுவத்தில் பணியாற்றினார். அவர் பணிசெய்த காலத்தில் நடந்த இந்தியா_பாகிஸ்தான் இடையேயான யுத்தத்திலும் கலந்து கொண்டார். அய்யலுசாமி தீவிர நாட்டுப்பற்று மிக்கவர். இப்போது 75 வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, அவர் கயத்தாரில் உள்ள தன் வீட்டின் வெளிப்புற சுற்றுச்சுவர் முழுவதும் தேசியக்கொடியை ஓவியமாக வரைந்துள்ளார். கூடவே அந்த ஏரியாவாசிகளுக்கும் சுதந்திர உணர்வினை ஊட்டிவருகிறார். அதுமட்டும் இல்லாமல் இந்த வீட்டைக் கடந்து செல்பவர்களும் இந்த தேசியக் கொடி வர்ணச் சுவருக்கு மரியாதை செலுத்திச் செல்கின்றனர்.

இதையும் பாருங்க:  வாழ்க்கைத் பாடத்தை முப்பது நொடியில் விளக்கிய ஆடு… மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ..!

ராணுவ வீரர் அய்யலுசாமியின் இந்த தேசப்பற்று நம்மையும் சிலிர்க்க வைக்கிறது தானே? சல்யூட் சார்!

Related articles