தேவை இல்லை என குப்பையில் வீசப்படும் பேரீட்சம்பழ கொட்டைக்கு இவ்வளவு சக்தியா…. இனி ஒரு முறை அந்த தவறை செய்திடாதீங்க!

தேவை இல்லை என குப்பையில் வீசப்படும் பேரீட்சம்பழ கொட்டைக்கு இவ்வளவு சக்தியா…. இனி ஒரு முறை அந்த தவறை செய்திடாதீங்க!

பிள்ளை-கள் முதல் பெரியவர்-கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடிய கனி. ஆப்ரிக்கா, அரபு நாடுகளில் மட்டும் அதிகம் விளையக்கூடிய கனி பேரிச்சை.ஆயுர்வேதம், யுனானி, சித்த மருத்துவத்தில் பேரிச்சை கனி முக்கியமான பங்கு வகிக்கிறது. சூரிய சக்தி அனைத்தையும் தன்னுள்ளே கொண்டுள்ள கனி பேரிச்சை. பழங்காலத்தில் இருந்தே பயன்பாட்டில் இருக்கக் கூடிய ஒரு கனி பேரிச்சம்.

பேரிச்சம் பழத்தில் அதிகப்படியான இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் A, வைட்டமின் B, வைட்டமின் B12, வைட்டமின் E போன்ற சத்துக்-கள் நிறைந்துள்ளன.இத்தனை சத்துக்களை தனக்குள் வைத்திருக்கும் பேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிடுவதினால் கிடைக்கும் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.

இரத்த சோகை பிரச்சனை உடையவர்-கள் இந்த பேரிச்சம் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் விரித்தி அடைந்து இரத்த சோகை விரைவில் குணமாகும். பேரிச்சம் பழத்தை ஒரு கிளாஸ் பாலில் ஊற வைத்து குடித்து வரும்போது கர்ப காலத்தில் ஏற்படும் இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கும்.

மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்-கள் இரவு நேரத்தில் பேரிச்சம் பழத்தை நீரில் ஊற வைத்து அதனை காலையில் சாப்பிட்டு வருவதினால் சுலபமாக மலம் கழிக்க உதவும். ஏனெனில் பேரிச்சம் பழத்தில் உள்ள நார்ச்சத்து உடலை சீராக இயக்கி செரிமானத்தை சரி செய்து மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்து கொள்கிறது.

பார்வை கோளாறு உள்ளவர்-கள் பேரிச்சம் பழத்தை எடுத்து வரலாம். கண் பார்வைக்கு தேவையான வைட்டமின் A பேரிச்சையில் நிறைந்துள்ளதாலும் ஆன்டி ஆக்ஸிடன்டு-கள் கொண்ட கனி இது என்பதால் கண் சம்பந்தமான பிரச்சனை விரைவாக குணமடையும். அது மட்டும் இல்லாமல் மாலை கண் நோய் ஏற்படாமல் பாதுகாக்க கூடியது பேரிச்சை.

இதையும் பாருங்க:  நாம் சமைக்க பயன்படுத்தும் பாமாயில் இப்படித்தான் உற்பத்தி செய்யுறாங்க!!

கால்சியம் குறைப்பாட்டினால் ஏற்படும் ஆஸ்டியோபோரிஸ், மூட்டு வலி போன்ற பிரச்சனைகளை சரி செய்ய வல்லது இந்த பேரிச்சம் கனி. தினமும் மூன்று அல்லது நான்கு பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால் ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்கும். இதனால் எலும்பு சம்மந்தமான பிரச்சனைஙன-கள் வராமல் நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.

குடல் கோளாறுகளை சரி செய்ய கூடியது பேரிச்சை. பேரிச்சம் பழத்தில் உள்ள கால்சியம், வைட்டமின் B5, வைட்டமின் B3, நார்ச்சத்து, காப்பர், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்-கள் கொண்ட இந்த பழத்தை தினமும் சாப்பிட்டு வர குடலில் உள்ள பிரச்சனை-கள் கூடிய விரைவில் குணமாகும்.

பற்சொத்தை உடையவர்-கள் இந்த பேரிச்சம் பழத்தை எடுத்து வந்தால் பற்-கள் சம்மந்தமான எந்த பிரச்சனையும் உங்களை நெருங்காது. பற்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான ஃப்ளோரின் அதிக அளவில் உள்ளது.

வெண் குஷ்டம் கொண்டவர்-கள் பேரிச்சம் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்-கள் அதிகரிப்பது மட்டும் அல்லாமல் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். அதோடு வெண் குஷ்டமும் நாளடைவில் குணமடையும்.

பேரிச்சம் பழத்தை போலவே அதன் கொட்டையிலும் அதிக சத்துக்-கள் உள்ளன. எனவே அதனை வறுத்து பொடி செய்து வாரத்தில் ஒரு முறை பாலில் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு தேவையான பலம் கிடைக்கும்.

கருத்தை சொல்லுங்கள் ...