நடனமாடும்போது வழுக்கி விழுந்த லட்சுமி மேனன் – வைரல் வீடியோ

நடனமாடும்போது வழுக்கி விழுந்த லட்சுமி மேனன்
2012 ஆம் ஆண்டு வெளியான சுந்தரபாண்டியன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி கும்கி படத்தில் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றவர்தான் நடிகை லட்சுமி மேனன்.
ஒரே வருடத்தில் பல படங்களில் நடிக்கும் நடிகையாகவும் வலம் வந்தார். இவரின் வளர்ச்சியை கண்டு முன்னணி நடிகைகளே கொஞ்சம் ஆடிப் போய் இருந்தார்கள். அதுமட்டுமின்றி தொடர்ந்து வெற்றிப் படங்களையும் கொடுத்து வந்தார்.
குட்டி புலி, நான் சிகப்பு மனிதன், பாண்டிய நாடு, கொம்பன் போன்ற பல தொடர் வெற்றிகளால் தமிழ் சினிமாவின் உச்ச நடிகை ரேஞ்சுக்கு வேகமாக உயர்ந்தார். அந்த பூரிப்பில் உடல் எடையும் சற்று அதிகமாகிவிட்டது.
இதனால் ரசிகர்கள் பார்ப்பதற்கு ஆண் போல இருக்கிறார் என கிண்டல் செய்து வந்தனர். அந்த நேரத்தில் வெளிவந்த ரெக்க படம் படுதோல்வியை சந்தித்தது. அதன்பிறகு சில படங்களில் நடித்து வந்தாலும் தற்காலிகமாக நடிப்புக்கு பிரேக் விட்டுள்ளர்.
தற்போது கொஞ்சம் கொஞ்சமாக உடல் எடையை குறைத்த லட்சுமி மேனன் மீண்டும் சினிமாவில் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்துவதற்காக அவ்வப்போது புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் நடனமாடியபடி சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் எதிர்பாராவிதமாக வழுக்கி விழுந்ததை சமாளிக்கும் வகையில் யாரும் இதை ட்ரை பண்ண வேண்டாம் என தெரிவித்துக் கொண்டார். ஓவர் சீன் உடம்புக்கு ஆகாது என்று சொல்லுவாங்க அது இதுதானா?