நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதமை தாக்கி செல்போன் பறித்த கும்பல்

நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதமை தாக்கி செல்போன் பறித்த கும்பல்

2013 ஆம் ஆண்டில் கடல் படத்தின் வாயிலாக  திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் கார்த்திக் கின் மகனான கெளதம். தொடர்ந்து பல படங்களில் நடித்து-ள்ளார். கடந்த வருடம் கெளதம் கார்த்திக் நடித்த “தேவராட்டம்”  வெளியானது.    

இந்-நிலையில் இன்று காலையில், சென்னை ஆழ்வார்-பேட்டையில் உள்ள டி.டி.கே சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார் கெளதம் கார்த்திக். அப்போது இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்த மர்ம நபர்கள், அவரிடமிருந்த மொபைல் போனை  பறித்துச் சென்றார்கள்.  

இதையடுத்து இச்-சம்பவம் குறித்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் கெளதம் கார்த்திக். இதன் அடிப்படையில் போலீசார்  விசாரணை செய்து வருகிறார்கள்.

error: Content is protected !!