நண்டு தனது கண்களில் படும் தூசியை எப்படி சுத்தம் செய்யும் தெரியுமா?

நண்டு தனது கண்களில் படும் தூசியை எப்படி சுத்தம் செய்யும் தெரியுமா?

நண்டு தனது கண்களில் படும் தூசியை எப்படி சுத்தம் செய்யும் தெரியுமா? என்பதை விளக்கும் வகையில் வீடியோ காட்சி ஓன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை கவர்ந்துள்ளது.

காரின் வைப்பர் கண்ணாடியை சுத்தம் செய்வது போன்று  தனது கண்களை சுத்தம் செய்யும் நண்டின் வீடியோ கடந்த நான்கு மாதங்களாக வைரல் ஆகி வருகிறது. அமெரிக்காவின் அட்லாண்டிக் கடற்கரை ஓரத்தில் காணப்படும் ‘அட்லாண்டிக் கூஸ்ட்’  நண்டினங்கள் கடற்கரை ஓரத்தில் உள்ள பொந்துகளில் மட்டுமே வாழும். இந்தவகை நண்டினங்கள் தமது கண்களில் படிந்துள்ள மண்ணினை தாமாகவே நீக்கும் காட்சியானது வாகனத்தில் கண்ணாடியில் படிந்த தண்ணீரை வைப்பர் சுத்தம் செய்வது போல் இருக்கிறது.

அவற்றின் கண்களை சுத்தம் செய்யும் இந்த வீடியோ  பேஸ் புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற  சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.

இதையும் பாருங்க:  குக்கூ பாடலுக்கு கேரள போலிஸ் போட்ட செம டான்ஸ்!