நான் விஜய் படங்களை பார்ப்பது இல்லை : நெப்போலியன் பளீர்

நான் விஜய் படங்களை பார்ப்பது இல்லை : நெப்போலியன் பளீர்
நான் விஜய் படங்களை பார்ப்பது இல்லை , அவரிடம் பேசுவதும் இல்லை என்று நடிகர் நெப்போலியன் தெரிவித்துள்ளார்.
நெப் போலியன் நடித் திருக்கும் டெவில்ஸ் நைட் என்ற ஹாலிவுட் திரைப் படம் கொரோனா அச்சுறுத் தலால் திரையரங்கில் வெளி  யாகாமல் அமெரிக்கா மற்றும் கனடாவில் ஓடிடி தளத்தில் வெளி யிடப்பட்டது. மற்ற நாடுகளிலும் படத்தை வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளது படக்குழு.
இந்நிலையில் படத்தின் விளம்பரத்துக்காக நடிகர் நெப்போலியன் ஜூம் செயலியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நீங்கள் இளைய தலைமுறை நடிகர்களுடன் நடித்திருக்கிறீர்கள். விஜய்யுடன் போக்கிரி படத்தில் நடித்த நீங்கள், இப்போது அவரது வளர்ச்சியை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது.
விஜய்க்கும் எனக்கும் ஒரு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதிலிருந்து அவருடன் நான் பேசுவதுமில்லை. தொடர்ந்து அவருடைய படங்களை பார்ப்பதுமில்லை. அதனால் அவருடைய வளர்ச்சி இப்போது எப்படி இருக்கிறது என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. போக்கிரி படத்தைப் பொறுத்தவரையில் நன்றாக வந்திருந்தது. படம் வெற்றியடைந்தது.
தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த ரோலில் தான் விஜய் நடித்தார். நன்றாக நடித்தார். படம் நன்றாக வசூலித்தது. கடின உழைப்பைக் கொடுக்கிறார். அதனால் தானே வளர்ந்து வருகிறார்” என்றார்.
சிவகார்த்திகேயனுடன் நடித்த அனுபவம் பற்றி கூறிய நெப்போலியன், “சீமராஜாவில் சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக நடித்திருந்தேன். ஒரு தொகுப்பாளராக இருந்து அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார். அது சாதாரண விஷயமல்ல. எனக்கு பிடித்த நடிகர்களில் அவரும் ஒருவர்” என்று கூறினார்
இதையும் பாருங்க:  நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளி யிட்ட அருண் பாண்டியனின் மகள் கீர்த்திபாண்டியன்

Related articles