நாம் சமைக்க பயன்படுத்தும் பாமாயில் இப்படித்தான் உற்பத்தி செய்யுறாங்க!!

நாம் சமைக்க பயன்படுத்தும் பாமாயில் இப்படித்தான் உற்பத்தி செய்யுறாங்க பாருங்க தெரிஞ்சுக்கோங்க.

செம்பனை எண்ணெய் எனப்படுவது செம்பனை அல்லது எண்ணெய்ப் பனை எனப்படும் ஒரு விதப் பனை மரத்தின் பழங்களில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் ஆகும். இது தென்னையைப் போன்று ஒரு மரம். எண்ணெய்ப் பனை என்கின்றனர். மேலும் இம்மரம் பாமாயில் பனை, செம்பனை எனவும் அழைக்கப்படுகிறது. இரண்டு பனை இனங்களில் இருந்து பாம் ஆயில் கிடைக்கிறது. ஆப்பிரிக்காவின் பாமாயில் என்பது எலியிஸ் குயினென்சிஸ் (Elaeis quineensis) என்கிற இனத்தில் இருந்து எடுக்கப்படுகிறது. இதை ஆப்பிரிக்கன் எண்ணெய்ப் பனை என்கின்றனர். மற்றொன்று அமெரிக்கன் பாமாயில். இது எலியிஸ் ஒலிபெரா (Elaesis oleifera) என்கிற இனத்தில் இருந்து எடுக்கப்படுகிறது. இது அமெரிக்கன் எண்ணெய்ப் பனை ஆகும். இது தவிர மாரிபா பனை (Attalea maripa) என்கிற மரத்திலிருந்தும் பாமாயில் எடுக்கப்படுகிறது . இந்த எண்ணெய் சிவந்த நிறத்தில் இருக்கும். இப்பனை மரங்கள் இந்தோனேசியா, மலேசியா, நைசீரியா முதலிய நாடுகளில் பெருமளவு பயிர்செய்யப் படுகிறது. இப்பனைப் பயிர்செய்கையினால் மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதாகக் கூறப்பட்டாலும் இவை பயிரிடப்படும் நாடுகளில் காடழிப்புக்கு இது ஒரு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.