பசுமாட்டை விட்டு பிரிய மறுத்து பாசப் போராட்டம் நடத்திய காளை மாடு

பசுமாட்டை விட்டு பிரிய மறுத்து பாசப் போராட்டம் நடத்திய காளை மாடு

Follow us on Google News Click Here

மதுரையில் பசுமாட்டை விட்டு பிரிய மறுத்து காளை மாடு நடத்திய பாசப் போ ராட்டம்.

மதுரை பாலமேடு பகுதியைச் சேர்ந்த முனியாண்டி என்பவர் பசு மாடு வளர்த்து வந்த நிலையில் பாலமேடு மஞ்சமலை கோவில் காளையும் அவ்வழியே செல்லும் போது முனியாண்டியின் பசு மாடுடன் சேர்ந்து பழம், காய்கறிகள், தண்ணீர், அரிசி போன்றவற்றை சாப்பிட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.ஊரடங்கால் வருமானமின்றி தவித்த முனியாண்டி தனது பசு மாட்டினை விற்பனை செய்ய முடிவெடுத்து ஒரு சரக்கு வாகனத்தில் அதனை ஏற்றி அனுப்பியுள்ளார்.

இதனை கவனித்த அந்த காளை மாடு, ஓடிச் சென்று சரக்கு வண்டியை நகர  விடாமல் 1 மணி நேரமாக அங்கேயே நின்று பாசப்போராட்டம் நடத்தியது டிரைவர் மற்றும் பசு மாட்டின் உரிமையாளரை வண்டியை இயக்க விடாமல் முட்டியது. பின்னர் ஒரு வழியாக வேன் புறப்பட தொடங்கியவுடன், அந்த பசு மாடு செல்லும் வாகனத்தை பின் தொடர்ந்து சிறிது தூரம் சாலையில் ஓடிச் சென்றது பார்போரை கண்ணீர் வர வைத்தது.

சுமார் 1 கிலோ மீற்றர் தூரம் வரை ஓடி சென்று மூச்சு வாங்கி நின்றுள்ளது. பசு மாட்டை பிரிய மறுத்து காளை மாடு பாசப் போ ராட்டம் நடத்தியது அனைவரையும் வியப்படைய செய்துள்ளது மட்டுமின்றி பாசத்திற்க்கு உதாரனமாக அந்த காளை விளங்கியது.

 

Follow us on Google News Click Here

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!