பச்சக்குழந்தையின் பாசத்துக்கு கட்டுப்படும் ஜல்லிக்கட்டு காளை மாடு.. இந்த அன்புக்கு முன்னால் எதுவுமே ஈடு இல்லை…!

பச்சக்குழந்தையின் பாசத்துக்கு கட்டுப்படும் ஜல்லிக்கட்டு காளை மாடு.. இந்த அன்புக்கு முன்னால் எதுவுமே ஈடு இல்லை…!

அன்பு மனுசர்களுக்கு மட்டுமானது என நாம் புரிந்துவைத்துள்ளோம். ஆனால் பாசத்தில் மனுசர்களுக்கும், ஐந்தறிவு ஜீவன்களுக்கும் பெரிய பாகுபாடு எதுவும் கிடையாது. ஐந்தறிவு படைத்த ஜீவராசிகளும் தங்கள் குட்டிகளின் மீதும், தன்னை வளர்ப்பவர்_கள் மீதும் அலாதி அன்பு கொண்டவைதான். அதை மெய்ப்பிக்கும்வகையில் இப்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது.

பொதுவாகவே வீட்டில் பசு மாடு இருப்பது அதிர்ஷ்டம் என சொல்வார்_கள். அதனால் தான் பசுவை கோமாதா எனச் சொல்கிறோம். பசு மாடு மிகவும் பாசமாக பழகக் கூடியதுகூட. மனுசர்களோடு நெருக்கமாக இருக்கும் பிராணிகளில் முதன்மையானது மாடு. டீ, காபி என எதைக் குடித்தாலும் அதற்கு மூலப்பொருளான பாலைக் கொடுப்பதால் பசு நமக்கு அன்னமிடும் விலங்கும் கூட.

அதேபோல் காளை மாட்டை விவசாயத் தேவைக்காக வளர்ப்பார்கள். காளை மாடுகள் வயலில் விவசாய வேலையை செய்வதுடன் ஜல்லிக்கட்டுப் போட்டியிலும் கலந்து_கொண்டு அசத்துகின்றன.

இங்கேயும் ஒரு விவசாயி தனது வீட்டில் ஜல்லிக்கட்டு காளை ஒன்றை வளர்த்து வந்தார். அந்தக் காளை மாடானது, அந்த வீட்டின் கடைக்குட்டிப் பையன் சொல்வது எல்லாவற்றையும் கேட்கிறது. மூன்று வயதே ஆன அந்த பொடியன் கம்பீரமாக அந்த மாட்டை பிடித்து நடந்துவருவதும், அதை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வதும் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. இதோ நீங்களே இந்த காட்சியைப் பாருங்களேன்.

இதையும் பாருங்க:  'உன் ரெட்டைச்சடை கூப்பிடுதே முத்தம்மா' பாடலுக்கு திருநெல்வேலி கல்லூரி மாணவிகள் போட்ட செம டான்ஸ்

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...