பரம்பரையில் முதல் ஆளாக கார் வாங்கிய ஜி பி முத்து

பரம்பரையில் முதல் ஆளாக கார் வாங்கிய ஜி பி முத்து குறித்து அவரே சொன்ன தகவல் இணையத்தில் வெளியாகி செம வைரலாக பரவி வருகிறது.

ஜி பி முத்து ஒரு பிரபலமான யூடியூபர் மற்றும் நடிகர் ஆவார் . ஆரம்பத்தில் டிக் டாக் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமான ஜி பி முத்து பின்னர் பிக் பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெரிய அளவில் பிரபலமானார் . குறிப்பாக இவருடைய கள்ளம் கபடம் இல்லாத மனசு எல்லோருக்குமே பிடித்திருந்தது என்று தான் சொல்ல வேண்டும் . அதுமட்டுமில்லாமல் தற்போது ,
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார் ஜி பி முத்து. இப்படி சின்னத்திரையில் கலக்கி கொண்டு வந்த ஜி பி முத்து வெள்ளித்திரையில் வெளியான துணிவு ,ஓ மை கோஸ்ட் உட்பட , பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் யூடியூப் வீடியோ போட்டு அதன் மூலம் நல்ல வருமானத்தை பார்த்து வரும் ஜி பி முத்து தற்போது புதிய கார் ஒன்றை வாங்கி இருக்கிறார் . அந்தக் காரின் விலை சுமார் 12 முதல் 15 லட்சம் வரை இருக்கும் ,
என்று தகவல் வெளியாகி உள்ளது . அது மட்டுமில்லாமல் அவருடைய பரம்பரையிலேயே இவர்தான் முதன் முதலில் கார் வாங்குகிறாராம் . அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது…







