பள்ளி பருவத்தில் என் நண்பருடன் ஒரே கட்டிலில் தூங்குவேன் – பிரியா பவானி சங்கர்

பள்ளி பருவத்தில் என் நண்பருடன் ஒரே கட்டிலில்தான் தூங்குவேன் – பிரியா பவானி சங்கர்
தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் நடித்து பின்னர் மேயாத மான் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் கதாநாயகியாக நடித்து வெளியான மான்ஸ்டர் மற்றும் மாஃபியா திரைப்படங்களின் மூலம் ரசிகர்களின் ஆதரவை பெற்றார்.
இப்போது தமிழில் பல படங்களில் ஒப்பந்தமாகி முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விருந்தினராக பங்கேற்றுள்ளார் நடிகை பிரியா, அந்த நிகழ்ச்சியில் நடிகை பிரியாவின் எல்.கே.ஜி நண்பராக நடித்து ஒருவர் ஏமாற்றியுள்ளார்.
மேலும், அவரின் எல்.கே.ஜி நண்பரான மணிகண்டன் குறித்து கூறுகையில் “ மணிகண்டன் எனது நெருங்கிய சிறந்த நண்பர், அவரை விட்டு பிரியவே மாட்டேன். மேலும், மதிய நேர சாப்பாடு முடிந்ததும் எங்களை தனிதனியாகதான் தூங்க சொல்வார்கள்.
ஆனால் எனது அப்பாவின் அனுமதி பெற்று நானும் மணிகண்டனும் ஒன்றாகதான் கட்டிலில் தூங்குவோம்.மேலும், அந்த குட்டி மணிகண்டனை என்னால் மறக்கவே முடியாது” என சொல்லியிள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர்.
இவ்வாறு கூறியுள்ளது ரசிகர்களின் மத்தியில் பெறும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்துயுள்ளது…