பாக்கியலட்சுமி இன்றைய (8/12/2021) முழு எபிசோடு அப்டேட்

பாக்கியலட்சுமி இன்றைய (8/12/2021) முழு எபிசோடு அப்டேட்

தமிழ் தொலைக்காட்சியில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று Amirtha வீட்டிற்கு போன Ezhil நிலா பாப்பாவை தூக்கி கொஞ்சி கொண்டு இருக்கிறார். Amirthaவின் அம்மா அவரை கூப்பிட்டு காபி போட்டு கொடுக்குமாறு கூறுகிறார். வெளியே வந்த Amirthaவிடம் அதெல்லாம் வேண்டாம் என Ezhil சொல்ல அதுதான் வேணாம்னு சொல்கிறாரே என முகத்தை திருப்பிக் கொண்டு உள்ளே சென்று விடுகிறார். இதனால் குழப்பமான Amirthaவின் பெற்றோர் இவளுக்கு என்ன ஆச்சு என யோசிக்கின்றனர். அதன் பிறகு அமுதாவின் அப்பா உங்க ரெண்டு பேருக்கும் ஏதாச்சும் சண்டையா எனக் கேட்கிறார். எங்களுக்குள்ள என்னப்பா சண்டை வரப்போகுது என Ezhil சமாளித்து விடுகிறார்.

இந்தப் பக்கம் Baakiya அவரது அத்தை மற்றும் மாமாவுக்கு காபி எடுத்து வந்து கொடுக்கிறார். நீ குடிக்கலையா என அவருடைய மாமனார் கேட்க நான் அப்புறம் குடித்திருக்கிறேன் எனக் கூறுகிறார். பிறகு Jeniயும் செழியனும் வெளியே செல்வதற்கு தயாராகி வருகின்றனர். சினிமாவுக்கு செல்வதாக கூறிவிட்டு அவர்கள் கிளம்புகின்றனர். போகும்போது செழியன் நீதான் Jeniயை எங்கும் கூட்டிட்டு போகலனு சொல்லிட்டு இருந்தேன் இப்போ வெளியே போறேன் உனக்கு சந்தோஷமா என கேட்டு விட்டு கிளம்புகிறார். இப்போ செழியன் ரொம்ப திருந்திட்டான் என Baakiya சொல்ல அத்தை மாமா இருவரும் ஆமாம் என சொல்கின்றனர்.

அடுத்ததாக ஆபீசில் Ezhil மிகுந்த வருத்தத்தோடு இருக்கிறார். சதீஷ் வந்து எடிட்டருக்கு போன் பண்ணியா என கேட்பது கூட தெரியாமல் சிந்தனையில் இருக்கிறார். பிறகு சதீஷ் உனக்கு பணம் பண்ணனும்றது எவ்வளவு ஆசை, ஆனா இப்போ பண்ண முடியுமான்னு தெரியல. இப்படியே இருந்தா நல்லது இல்ல அவங்க தான் பேசலல விட்டுத்தள்ளு என கூறுகிறார். ‌‌

இந்தப் பக்கம் Baakiya போனை வைத்துக்கொண்டு எவ்வளவு லைக் வந்திருக்கு என் எது என பார்த்துக் கொண்டிருக்கிறார். இதனை பார்த்த இனிய உடனே வீட்டில் உள்ள அனைவரையும் கூட்டி வந்து சத்தமில்லாமல் பின்னாடி நிற்கிறார். Jeni எப்படியோ சொல்லிக் கொடுத்தாலே என தலையில் அடித்துக்கொண்டு பார்க்கிறார் Baakiya. பிறகு Ezhil மா என்னமா பண்ணிட்டு இருக்க எனக் கேட்கிறார். எல்லோரும் பின்னாடி இருப்பதை பார்த்து ஷாக்கான Baakiya என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறார்.

பிறகு Ezhil நீ பண்ண விளம்பரத்த என்னுடைய பேஜில் மட்டும் 25 ஆயிரம் பேர் பார்த்திருக்காங்க என கூறுகிறார். அதுமட்டுமல்ல என்னோட இதுல பத்தாயிரம் பேர் பார்த்து இருக்காங்க என Jeni கூறுகிறார். ஒத்தை இதுவரைக்கும் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் உன்னோட வீடியோவை பார்த்து இருப்பார்கள் என சொல்கிறார்.

ஒரே நாள்ல இவ்வளவு பேரா? நான் ரொம்ப பிரபலம் ஆகி விட்டேன் என Baakiya வெட்கப்படுகிறார். பிறகு இரவில் தூங்கும் போது இனியாவை எழுப்பி எழுப்பி இதைப் பற்றி பேசி அவரை வெறுப்பேற்றுகிறார். இனியா போனை புடுங்கி வைத்து விட்டு தூங்கி விடுகிறார். Baakiya தான் பிரபலமானது நினைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி தொடர் எபிசோட் முடிவடைகிறது.

error: Content is protected !!