பார்க்கவே பரிதாபமாக இருக்கு: தர்ஷனுக்கு கொஞ்சம் சோறு போடுங்க பிக் பாஸ்

சென்னை:
பிக் பாஸ் 3 போட்டியாளரான தர்ஷனை பார்த்து பார்வையாளர்கள் பரிதாபப்படுகிறார்கள். பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் நல்லவர், நியாயமானவர் என்று பார்வையாளர்கள் அனைவராலும் பாராட்டப்படுபவர் தர்ஷன் தான். பிக் பாஸ் வீட்டிற்கு வந்தபோது ஜிம் பாடியாக கும்மென்று இருந்தார் தர்ஷன்.
3 வாரங்களில் உடல் எடை குறைந்து கன்னம் ஒட்டிப் போய் பார்க்க பரிதாபமாக உள்ளார் தர்ஷன். இதில் தாடி வேறு வளர்த்து உடல்நலம் பாதிக்கப்பட்டவர் போன்று தெரிகிறார். வனிதாவை துணிச்சலாக எதிர்த்து கேள்வி கேட்டு பார்வையாளர்களின் பாராட்டை பெற்ற தர்ஷன் தற்போது அவர்களின் அனுதாபத்திற்கும் ஆளாகியுள்ளார். பிக் பாஸ் வீட்டில் தங்கி என் உடல் எடை குறைந்துவிட்டது என்று நடிகைகள் சிலர் தெரிவித்து கேட்டுள்ளோம்.
ஆனால் தர்ஷனை பார்த்தாலே அது தெரிகிறது. யோவ், பிக் பாஸ் எங்க தர்ஷனுக்கு நல்லா சோறு போடுய்யா. தம்பி, நாளுக்கு நாள் மெலிந்து கொண்டே போகிறது என்று பார்வையாளர்கள் அக்கறையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர். பிக் பாஸ் வீட்டிற்கு சென்றால் தங்களின் கெரியர் பிக்கப்பாகிவிடும் என்ற நம்பிக்கையில் தான் பல பிரபலங்கள் செல்கிறார்கள். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பு முழுமையாக நிறைவேறுவது இல்லை. ஆனால் சீசன் 3 போட்டியாளர்களில் தர்ஷனுக்கு கோலிவுட்டில் நல்ல எதிர்காலம் இருப்பதாக பிக் பாஸ் பார்வையாளர்கள் நம்புகிறார்கள். படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சென்னை வந்த தர்ஷனுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி நிச்சயம் கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிக் பாஸ் வீட்டில் நல்ல பிள்ளை என்று பெயர் எடுப்பது சாதாரண விஷயம் இல்லை. இது என்ன பெரிய தர்ஷன், ஒரு ஓரமாக இருக்கும் ஆளுக்கு பெரிய பில்ட்அப்பா என்று முதலில் நினைத்தவர்களே தற்போது அவரை புகழ்கிறார்கள். தர்ஷனுக்கும் ட்விட்டரில் ஆர்மி உள்ளது. ஆனால் எங்க தர்ஷனின் ஆர்ம்ஸை பாரு, சிரிப்பை பாரு, மீசையை பாரு, தாடியை பாரு, அழகை பாரு என்று கூறி யாரையும் கடுப்பேற்றாத ஆர்மி இந்த தர்ஷன் ஆர்மி.