பின்னுக்கு சென்ற இந்திய அணி.. உலகக் கோப்பை தோல்வியால் நேர்ந்த அதிர்ச்சி..

லண்டன்:

உலகக் கோப்பை தொடரில் தோல்வி அடைந்தது இந்திய அணிக்கு ஐசிசி புள்ளிகள் பட்டியலில் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இந்தியா இதிலிருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. உலகக் கோப்பை தொடரில் இருந்து இந்திய அணி தோல்வியுடன் வெளியேறியது..

லீக் போட்டிகளில் தொடர்ந்து வெற்றிபெற்ற இந்திய அணி செமி பைனல் போட்டியில் தோல்வி அடைந்தது. இந்த தொடரில் அசத்தலாக வெற்றிபெற்று இங்கிலாந்து அணி கோப்பையை வென்றுள்ளது. ஒரு ரன் கூட வித்தியாசம் இல்லாமல் நியூசிலாந்து அணி தோல்வியை சந்தித்துள்ளது. அவரை மீண்டும் எடுக்க மாட்டோம்.. ரசிகர்களை அதிர வைக்கும் பிசிசிஐயின் முடிவு.. தோனிக்கு நெருக்கடி! வெளியீடு இந்த நிலையில் தற்போது ஐசிசி புதிய புள்ளிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஒரு நாள் அணிகளுக்கான மற்றும் வீரர்களுக்கான புள்ளிகள் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இதில் பல சுவாரசியமான விஷயங்கள் அடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. பேட்ஸ்மேன் ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் எந்த விதமான மாற்றமும் இல்லை.

இதில் தொடர்ந்து 886 புள்ளிகளுடன் கோலி முதலிடத்தில் இருக்கிறார். 881 புள்ளிகளுடன் ரோஹித் சர்மா இரண்டாம் இடத்திலும் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் மூன்றாம் இடத்திலும் இருக்கிறார்கள். பவுலர் என்ன அதேபோல் பவுலர்களிலும் எந்த விதமான மாற்றமும் இல்லை. இந்திய வீரர் பும்ரா 809 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். நியூசிலாந்து வீரர் டிரெண்ட் போல்ட் 740 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். தென்னாப்பிரிக்க வீரர் ரபாடா 694 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார். ஆனால் என்ன ஆனால் இங்கிலாந்து அணி ஒருநாள் அணிகள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.

உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டிகள் நடந்த போது இந்தியாதான் இதில் முதலிடத்தில் இருந்தது. ஆனால் தற்போது இந்தியா பின்னடைவை சந்தித்துள்ளது. தற்போது 125 புள்ளிகளுடன் இங்கிலாந்து முதலிடத்திலும், இந்தியா 122 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், நியூசிலாந்து 112 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது. என்ன வாய்ப்பு அடுத்த மாதம் இந்திய அணி மேற்கு இந்திய தீவுகளுக்கு கிரிக்கெட் தொடர் விளையாட செல்கிறது. அப்போது இந்தியா சரியாக விளையாடி சுதாரித்துக் கொண்டு தொடரை கைப்பற்றினால், கண்டிப்பாக மீண்டும் இதில் முதலிடம் பிடிக்க முடியும்.

உங்கள் கருதுங்களை இங்கே சொல்லுங்கள்

கருத்தை சொல்லுங்கள் ...

‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்