பிரபல நச்சத்திரம் பிரசாந்த்திற்கு இரண்டாவது கல்யாணம்! மணமகள் யார் தெரியுமா? தீயாய் பரவும் தகவல்

பிரபல நச்சத்திரம் பிரசாந்த்திற்கு இரண்டாவது கல்யாணம்! மணமகள் யார் தெரியுமா? தீயாய் பரவும் தகவல்

தமிழ் திரையுலகில் 90-களின் காலகட்டத்தில் முன்னணி ஹீரோகளுள் ஒருவராக வலம் வந்தவர் பிரசாந்த். அந்த காலகட்டத்தில் திரையுலகில் காதல் நாயகனாக மக்கள் மனதில் இடம்பிடித்தவர். மேலும் வாரிசு நடிகரான இவர் திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான தியாகராஜன் அவர்களின் மகனாவார். தனது பள்ளிப்படிப்பை முடித்து டாக்டர் ஆகவேண்டும் என்ற கனவுடன் இருந்த பிரசாந்த் திரையுலகின் மீது கொண்ட மோகத்தால் 17-வயதிலேயே சிநேம்மாவில் நடிக்க வந்து விட்டார். 1990-ல் வெளியான வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான பிரசாந்த் முதல் படத்திலேயே தனது அழகான தோற்றத்தாலும் படிப்பாலும் மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றார்.

இதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் பிசியான ஹீரோவாக நடித்து வந்தார். செம்பருத்தி, திருடா திருடா, ஆணழகன், பூமகள் ஊர்வலம், ஜீன்ஸ் போன்ற படங்கள் இவருக்கு மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றியை பெற்று தந்தது. ஜீன்ஸ் படத்தில் உலக அழகி ஐஸ்வர்யா ராயுடன் இணைந்து இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படம் இவருக்கு சினிமா உலகில் முன்னணி நட்சத்திரமாக திகழ வைத்தது. இவ்வாறன நிலையில் இவர் இறுதியாக அடைக்கலம் படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதன் பின் நீண்ட காலம் திரையுலகில் காணமல் போயிருந்தார் பிரசாந்த்.

இது கூறித்து கேட்டபோது , திரையுலகில் பிரபலமாக இருந்த பிரசாந்த் 2005-ம் ஆண்டு குடும்பத்தார் முன்னிலையில் கிரகலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து ஒரு வருடத்தில் கிரகலட்சுமிக்கு பிள்ளை பிறந்தது. இந்நிலையில் கிரகலட்சுமிக்கு ஏற்கனவே இன்னொருவருடன் திருமணமாகியுள்ளதாக தகவல் வெளியானது. கிரகலட்சுமி கல்லூரியில் படிக்கும் போது தனது தோழியின் அண்ணனான வேணு பிரசாந்த் காதலித்து 1988-ல் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் அதன் பின் இருவரும் அவரவர் வீட்டில் தனித்து வாழ்ந்து வாழ்ந்த நிலையில் அவர்கள் வீட்டில் முறைபடி செய்து கொள்வதாக கூறியும் அவர்கள் அதை ஏற்று கொள்ளாத நிலையில் இருவரும் பிரிந்தனர்.

இதையும் பாருங்க:  Bigboss அக்சராவின் மறைக்கப்பட்ட மறுபக்கம்!

மேலும் வேணு பிரசாந்தும் லீலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கிரகலக்ஷ்மியும் பிரசாந்தை திருமணம் செய்து கொண்டார். இப்படி இருக்கையில் திருமணம் ஆகி ஒரு வருடம் முடிந்து பிள்ளை பிறந்த நிலையில் தனது மனைவிக்கு ஏற்கனவே இன்னொருவருடன் திருமணம் ஆனதை அறிந்த பிரசாந்த் உடனே அவர் மீது காவல் துறையில் புகார் அளித்ததொடு அவரை விவகாரத்தும் செய்து விட்டார்.

48 வயதாகும் பிரசாந்த்திற்கு இரண்டாவது திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம். முதல் திருமணம் தோல்வி அடைந்ததுடன், சமீபத்தில் தான் விவாகரத்து பெற்றுள்ளார்.இதனால் மகனுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க தியாகராஜன் ஏற்பாடு செய்து வருகிறாராம். விரைவில் நிச்சயதார்த்தம் பற்றிய அறிவிப்பை தியாகராஜன் வெளியிட போகிறாராம். இந்த ஆண்டு இறுதிக்குள் பிரசாந்த்தின் திருமணம் நடைபெற உள்ளதாம். பெண் பார்த்து முடிவு செய்த விட்டதாக கூறப்படுகிறது.

இரண்டாவதாக திருமணம் செய்ய உள்ள பிரசாந்த்திற்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related articles