பிரியங்கா வேடத்தில் வந்து அரங்கத்தை அதிரவைத்த ராமர்

பிரியங்கா வேடத்தில் வந்து அரங்கத்தை அதிரவைத்த  ராமர்

காமெடி நடிகர் ராமர் விஜய் தொலைக்காட்சி ஆங்கர் பிரியங்கா கெட்டப்பில் வந்து அரங்கமே அதிர காமெடி கேலி செய்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

காமெடி நடிகர் ராமர் விஜய் தொலைக்காட்சி ஆங்கர் பிரியங்கா கெட்டப்பில் வந்து அரங்கமே அதிர காமெடி கேலி செய்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் இன்று இவர் இல்லாத ப்ரோகிராம்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு தனது காமெடி உணர்வாலும் காமெடி நடிப்பாலும் வளர்ந்துள்ளார் ராமர். விஜய் தொலைக்காட்சியில் முதலில் கலக்கப்போவது யாரு ப்ரோகிராம்யில் போட்டியாளராக உள்ளே வந்த ராமர் தனது காமெடி நடிப்பால் கலக்கி வருகிறார். அதிலும், அவர் பெண் வேடமிட்டு வரும்போது அவரைப் பார்த்த உடனே பார்வையாளர்கள் சிரித்துவிடுவார்கள். ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ என்று தொலைக்காட்சி நடிகையின் வசனத்தை கேலி செய்யும் ராமரின் நடிப்பு பலரையும் வயிறு வலிக்க சிரிப்பூட்டக் கூடியது.

விஜய் தொலைக்காட்சியில் அவருடைய காமெடி க்காகவே ராமர் வீடு என்ற ப்ரோகிராம் உருவானது. அந்த அளவுக்கு ராமர் கலாட்டா கலாய்கள் பிரபலமானது.

இந்த நிலையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சவுண்ட் பார்ட்டி ப்ரோகிராம்யில் பங்கேற்ற ராமர் பிரியங்கா கெட்டப்பில் வந்து பிரியங்காவை செமயாக கலாய்த்த காமெடி வீடியோவை விஜய் தொலைக்காட்சி புரமோவாக வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோகிராம் டிசம்பர் 13-ஆம் தேதி மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பானது.

சவுண்ட் பார்ட்டி ப்ரோகிராம்யில் விஜய் தொலைக்காட்சி நடிகைகள் கலந்துகொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்ச்யில் பிரியங்கா போல ஸ்கர்ட் அணிந்து வரும் பிரியங்கா கெட்டப்பில் வந்த ராமர், பிரியங்கா போல ஒரு பாடலைப் பாடி அனைவரையும் சிரிக்க வைத்துள்ளார். ராமரின் நடிப்பை பார்த்த பிரியங்கா பயங்கரமாக சிரிக்கிறார். பிரியங்கா கெட்டப்பில் ராமரின் காமெடி நடிப்பை பார்த்து பார்வையாளர்கள், நடிகைகள் அனைவரும் அரங்கமே அதிரும்படி சிரிக்கின்றனர். அவர்கள் மட்டுமல்ல இந்த வீடியோவைப் பார்க்க அனைவரும் அப்படித்தான் சிரிப்பார்கள். நீங்களும் பாருங்கள்.

இதையும் பாருங்க:  சிம்புவின் மல்லிப்பூ பாடலுக்கு தமிழ் இளம்பெண் போட்ட செம டான்ஸ்

கருத்தை சொல்லுங்கள் ...