பிளஸ் 2 இறுதித்தேர்வு எழுதாத மாணவர்கள் 27-ந்தேதி தேர்வு எழுதலாம் – அமைச்சர் செங்கோட்டையன்

பிளஸ் 2 இறுதித்தேர்வு எழுதாத மாணவர்கள் 27-ந்தேதி தேர்வு எழுதலாம் – அமைச்சர் செங்கோட்டையன்

Follow us on Google News Click Here

சென்னை:

+ 2 இறுதித்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27ந் தேதி தேர்வை நடத்த தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது. மார்ச் 24ந்தேதி தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்கு மட்டும் ஜூலை 27 ந்தேதி தேர்வு நடத்தப்பட இருக்கிறது. மாணவர்களுக்காக  அவர்களின் சொந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளது.

மாணவர்கள் புதிய நுழைவுச்சீட்டுகளை http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். 13ந்தேதி முதல் 17ந்தேதி வரை பள்ளிகளிலும் நுழைவுச்சீட்டுகளை பெறலாம்.

தனித்தேர்வர்கள் தங்களின் நுழைவுச்சீட்டுகளை குறிப்பிட்ட தேதிகளில் மட்டும் தனித்தேர்வு மையங்களில் பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்படும்.

பிளஸ் 2 மாணவர்கள் தேர்வு எழுத நோய்க்கட்டுப்பாடு உள்ள பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படமாட்டாது. தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் விரைவில் செல்வதற்காக தேவைக்கேற்ப போக்குவரத்து வசதிகள் செய்யப்படும்.

நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் தேர்வர்கள் தனி அறைகளில் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்  என்று தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

Follow us on Google News Click Here

கருத்தை சொல்லுங்கள் ...