புதுசா கல்யாணம் ஆனவங்களா நீங்க? இத கண்டிப்பா தெரிஞ்சிகோங்க

புதுசா கல்யாணம் ஆனவங்களா நீங்க? இத கண்டிப்பா தெரிஞ்சிகோங்க

குடும்ப பெண்கள் கல்யாணத்திற்க்கு பிறகு தெரிந்து வைத்திருக்க வேண்டிய சில விஷயங்கள்.

திருமணமான பெண்கள் செய்யக்கூடிய ஒருசில விஷயங்கள் அவர்களின் வாழ்க்கைக்கு து ரஅதிஷ்டங்கள் இல்லாமல் செய்யும். தற்போது பெண்கள் தெரிந்து வைத்துக்கொள்ளவேண்டிய வாஸ்து இரகசியங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம். வளையல் பெட்டியில் உடைந்த வளையல்கள் இருந்தால் உடனே அதை அகற்றிவிடுங்கள். அப்படியே வைத்திருத்தல் கூடாது பெண்களுக்கு திருமண புடவை என்பது முக்கியமான ஒன்று அந்த திருமண புடவையில் சிறு கீறலும் விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அப்படி நேர்ந்தால் அது கெட்ட சகுனம் என்று சாஸ்திரம் சொல்லுகிறது. முடிந்த அளவுக்கு திருமணமான பெண்கள் அடிக்கடி மெகந்தி போட்டுக்கொள்ளுங்கள். இது கணவன் மனைவிக்கு இடையேயான பந்தத்தை அதிகப்படுத்தும். நீங்கள் உபயோகித்த பொட்டை மற்றவர்களுக்கு கொடுக்கக்கூடாது. அவ்வாறு செய்தால் உங்களின் அதிர்ஷ்டத்தை நீங்களே இழந்ததிற்கு சமமாம்.

The Tamil Bride And Her Wedding – Arpita ...

உங்களின் திருமண நகைகளை மற்றவர்களுக்கு எக்காரணம் கொண்டும் இரவலாக கொடுக்க வேண்டாம்.

தங்கம் என்பது லட்சுமி தாயாரின் உருவமாக கருதப்படுவதால் தங்கத்தை காலில் அணிந்தால் லட்சுமி தாயாரின் கோபத்திற்கு ஆளாவீர்கள். மேலும் இது லட்சுமி தாயாரை அவமதித்ததற்கு சமமாகும்.

5 mistakes to avoid in a Ezhava Wedding | stylishbrides

பெண்கள் தாங்கள் பயன்படுத்தும் அலங்கார பொருட்களை பூஜைக்கு பயன்படுத்துவார்கள். இவ்வாறு பண்ணக்கூடாது. காலியான அலங்கார பொருட்களை தூக்கி வீசவும் கூடாது. உங்களின் தோட்டத்தில் அல்லது பூஜை அறையில் அதை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். வைரம் உங்களுக்கு பொருத்தமானதா இல்லையா என்பதை அறிந்தே நீங்கள் வைரத்தை வாங்கவேண்டும். ஒவ்வொரு உலோகமும் ஒருவித ஆற்றலை வெளிப்படுத்துவதால் கவனமாக இருக்க வேண்டும்.

இதையும் பாருங்க:  வித்தியாசமான முறையில் நடனம் ஆடி அசத்திய புதுமண தம்பதி

 

இதனை பின்பற்றுவதன் மூலம் அதிஷ்டம் நம் வாழ்க்கையில் அதிகம் வரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.